உலகம்
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசு... அதிர்ச்சியில் நோபல் கமிட்டி!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் எனவும், நான் 8 உலகநாடுகளின் போர்களை நிறுத்தியுள்ளேன் எனவும் செல்லும் இடமெல்லாம் சொல்லத் தவறியதில்லை. தனக்கு 2025ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என ட்ரம்பு காத்துக்கிடந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவிற்கு பிடிப்புடன், தனக்கு ஆதரவாக உள்ள உலகநாடுகளின் தலைவர்கள் தன்னை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என கூறியும் வந்தார். இருப்பினும் 2025ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்புக்கு வழங்கப்படவில்லை.
ஏன் நிராகரிக்கப்பட்டது நோபல் பரிசு?
நோபல் பரிசு பரிந்துரைக்கப்படும் காலத்திற்கு பிறகே டிரம்ப்பின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. குறிப்பாக 2025 பிப்ரவரி மாதம் 2ம் தேதி நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வதற்கான காலம் நிறைவடைந்த நிலையில், அதன் பின்னரே பாகிஸ்தான், இஸ்ரேல் நாட்டின் அதிபர்கள் ட்ரம்ப்பின் பெயரை பரிந்துரை செய்துள்ளனர். இதனால் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் பரிசீலனையில் கூட ட்ரம்ப்பின் பெயர் இடம்பெறவில்லை.
2025 அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்படவில்லை என்றதும், நோபல் பரிசு வழங்கும் கமிட்டியின் முடிவு தவறு என விமர்சிக்க தொடங்கினார் ட்ரம்ப்.
இதனைத்தொடர்ந்து அமைதிக்கான 2025ம் ஆண்டின் நோபல் பரிசு வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கியது நோபல் கமிட்டி.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக தற்போது தனக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கு பகிர்ந்தளித்துள்ளார் மரியா கொரினா மச்சாடோ.
போகும் இடமெல்லாம் புலம்பித்தள்ளிய ட்ரம்புக்கு ஒருவழியாக நோபல் பரிசு கிடைத்துவிட்டது என சமூக வலைதளங்களில் கிண்டலாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இந்த நிகழ்வை தொடர்ந்து ஒருவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை மற்றவருக்கு அளிக்க உரிமை இல்லை என நோபல் பரிசு வழங்கும் கமிட்டி திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க அதிபரான ட்ரம்பின் உத்தரவின்பேரில் சிறைபிடித்து அவர் தற்போது சிறையில் உள்ள நிலையில், இந்த நிகழ்வு கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
குறிப்பாக வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைதிற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஒரு நாடு மற்றொரு நாட்டிற்குள் சென்று அந்நாட்டு அதிபரை கைது செய்துள்ளதால், ஜனநாயகத்தை கொன்று புதைத்துள்ளது அமெரிக்கா என்றும், சர்வதேச சட்டங்களை மீறி அமெரிக்கா செயல்பட்டுள்ளது என்றும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
வெனிசுலா நாட்டில் அதிபர் மதுரோ கைதிற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் தெருவில் இறங்கி போராடி வரும் நிலையில், நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ, நோபல் பரிசை ட்ரம்புக்கு வழங்கியது அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மரியா கொரினா மச்சாடோ, "வெனிசுலாவின் வளர்ச்சிக்கும் இறையாண்மைக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முக்கிய பங்காற்றுகிறார். வெனிசுலாவின் வளர்ச்சியில் அவர் அதிகம் கவனம் செலுத்துகிறார்" என கூறியுள்ளார்.
நோபல் கமிட்டியின் எதிர்ப்பு மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து முன்வைக்கப்படும் கண்டனங்கள் ஆகியவற்றிற்கு இடையிலும் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர், தன் முடிவில் ஆணித்தரமாக இருப்பது சர்ச்சையாகியுள்ளது.
Also Read
-
திருவள்ளுவர் விருது முதல் இலக்கிய மாமணி விருது வரை!: 13 விருதாளர்களை சிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் சிலையுடன் கூடிய அரங்கம் நாளை (ஜன.17) திறப்பு!: முழு விவரம் உள்ளே!
-
“இதில் எனக்கு கூடுதல் பெருமை!” : சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்து துணை முதலமைச்சர் உரை!
-
“வாடிவாசலில் சீறி வரும் காளைகள்; வீரத்தை வெளிப்படுத்தும் மாடுபிடி வீரர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்!” : தமிழர் திருநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!