உலகம்

"விமான விபத்துக்கு முந்தைய ஜோ பைடன் அரசே காரணம்"- அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு !

பம்பார்டியர் சிஆர்ஜே 700 என்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனம் அமெரிக்காவின் கன்சாஸ் நகரின் விசிட்டா பகுதியிலிருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் ரீகன் தேசிய விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது இந்திய நேரப்படி நேற்று காலை 7.30 மணியளவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்துகொண்டிருந்தது. அப்போது அங்கு வர்ஜீனியாவில் உள்ள பெல்வாய்ர் என்ற இடத்திலிருந்து புறப்பட்ட சிக்கோர்ஸ்கி எச்-60 என்ற ராணுவ ஹெலிகாப்டர் பயணிகள் விமானத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் பயணித்த 67 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் உறுதிப்படுத்தினார். இந்த நிலையில், இந்த விபத்துக்கு முந்தைய ஜோ பைடன் அரசே காரணம் என டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "முந்தைய அரசை சேர்ந்தவர்கள் விமான பாதுகாப்பு குறித்த தரத்தை குறைந்து விட்டனர். அதுவே இந்த விபத்துக்கு காரணம். இந்த விபத்துக்கு பின்னால் எந்த சதியும் இருப்பதாக தெரியவில்லை"என்று டிரம்ப் கூறியுள்ளார்.

Also Read: “எமது விடுதலைப் போராட்டத்தில் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு உன்னதமானது”- விடுதலைப் புலிகள் அறிக்கை!