உலகம்
வங்கதேச எல்லை பகுதியை முழுவதுமாக கைப்பற்றிய புரட்சி படை : மியான்மரில் ராணுவத்துக்கு கடும் பின்னடைவு !
மியான்மரின் என்.எல்.டி கட்சியின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார். ஆனால், தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனக் கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது.
இதையடுத்து ராணுவத்தின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ராணுவ ஆட்சியை எதிர்த்து அந்த நாட்டில் பல ஆண்டுகளாக புரட்சி படையினர் போராடி வருகின்றனர். சமீபத்தில், 3 கிளர்ச்சிப் படையினர் மியான்மர் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் ஒன்று சேர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்த கூட்டணி ராணுவத்தின் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் உள்ள ராணுவ முகாம்களை புரட்சிப்படையினர் தாக்கி கைப்பற்றி வந்தனர். தொடர்ந்து முன்னேறி பலேத்வா நகரத்திலும் புரட்சிப்படையினர் தாக்குதல் நடத்தி அதனையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
அதோடு மேலும் முன்னேறி வங்கதேச எல்லை பகுதி முழுவதையும் தற்போது புரட்சி படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இடம்பெயர்ந்து இந்த பகுதிக்கு வரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!