உலகம்
சிரிய கிளர்ச்சியாளர்கள் குழுவுடன் நேரடி தொடர்பு... - அம்பலப்படுத்திய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் !
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவில் 1970-களின் தொடக்கத்தில் இருந்து கடந்த 54 ஆண்டுகளாக அசாத் குடும்பம் சிரியாவில் ஆட்சி புரிந்து வருகிறது. அந்த வகையில் தற்போதைய சிரிய அதிபராக பஷார் அல் அசாத் இருந்து வருகிறார்.
இவரின் இந்த அரசுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு சிரியாவின் பல பகுதிகளில் கிளர்ச்சி ஏற்பட்டது. நாட்டின் வடக்கு பகுதிகளில் குர்து பிரிவினரும், சன்னி பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தனர்.
எனினும் அதிபர் பஷார் அல் அசாத்தின் அரசுக்கு ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தனர். மேலும் ரஷ்ய ராணுவத்தின் ஒரு பகுதி சிரியாவில் பஷார் அல் அசாத்துக்கு ஆதரவாக இருந்து வந்தது. இதனால் கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றம் தடைபட்டது.
இதனிடையே உக்ரைன் - ரஷ்யா போர் மற்றும் இஸ்ரேல் - ஈரான் பதற்றத்தை பயன்படுத்தி சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பஷார் அல் அசாத் அரசுக்கு எதிராக திடீர் தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதல் காரணமாக சில நாட்களுக்கு முன்னர் நாட்டின் இரண்டாவது பெரிய நகரான அலெப்போ கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.
அதனைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமஸ்கஸ் நகரை கைப்பற்றியதாகவும், அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் எனவும் கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர்.இதன் மூலம் சிரியாவில் கடந்த 54 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது. மேலும் சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத் அரசுக்கு ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வந்தநிலையில், இது அந்த நாடுகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கிளர்ச்சியாளர்கள் குழுவுடன் நேரடி தொடர்பில் இருப்பதாக அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், "சிரியா கிளர்ச்சியாளர்கள் குழுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்.
சிரியாவின் எதிர்காலம் குறித்து விவாதிக்க பல்வேறு அரபு நாடுகள், துருக்கி மற்றும் ஐரோப்பாவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். சிரியா தொடர்ந்து குழப்பத்தில் இருப்பதாய் அமெரிக்க விரும்பவில்லை"என்று கூறியுள்ளார். இதனிடையே சிரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்க குடிமஞ ஒருவர் விடுவிக்கப்பட்டு ஜோர்டான் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !