உலகம்
"100 % வரி விதிக்கப்படும்"- இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க புதிய அதிபர் டிரம்ப் மிரட்டல்!
பொருளாதார ரீதியாக வளரும் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.2010ம் ஆண்டு முதல் இந்த உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த மாநாடு ஆன்லைன் வழியாக மட்டுமே நடந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு நேரடி மாநாடாக கடந்த தென்னாப்பிரிக்காவில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளிடையேஉள்ள சுமுக உறவு மற்றும் பொருளாதார வர்த்த உடன்பாடுகள் குறித்து விவாதிக்கபட்டது. அதோடு சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக வேறு பொது நாணயம் குறித்தும், பிரிக்ஸ் கூட்டமையில் பிற நாடுகளை இணைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், டாலருக்கு மாற்றாக புதிய பொது நாணயத்தை கொண்டுவர பிரிக்ஸ் நாடுகள் திட்டமிட்டால் அந்த நாடுகளின் 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தரும் அவர் தனது சொந்த சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் பதிவிட்டுள்ள பதிவில், "பிரிக்ஸ் கூட்டணி நாடுகள் அமெரிக்க டாலருக்கு மாற்றாக புதிய பொது நாணயத்தை கொண்டுவர மாட்டோம் என்கிற உறுதிமொழியை அளிக்கவேண்டும். இல்லையென்றால் அந்த நாடுகள் 100 சதவீத வரிவிதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
அவர்கள் டாலருக்கு மாற்றாக பொது நாணயத்தை கொண்டுவர விரும்பினால் அமெரிக்க பொருளாதாரத்தை அணுக முடியாது. சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு மாற்றாக வேறு ஒரு பொது நாணயத்தை கொண்டுவரும் நோக்கம் வெற்றிபெறாது. அந்த நாடுகளுக்கு அமெரிக்க பொருளாதாரத்தில் எந்த இடமும் வழங்கப்படாது" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!