உலகம்
அமெரிக்க அதிபர் தேர்தல் : முக்கிய மாகாணங்களில் முன்னிலை... வெற்றியை நெருங்கும் டொனால்ட் டிரம்ப் !
அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.
ஆனால், ஜோ பைடன் அமெரிக்க அதிபரானதில் இருந்து உக்ரைன்-ரஷ்யா போர், தைவான் விவகாரம் என பல்வேறு விவகாரத்தில் அமெரிக்கா சறுக்கி வந்தது. மேலும், உள்நாட்டிலும் வங்கி திவால், வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்தது.
அதன் உச்சமாக 81 வயதான ஜோ பைடன் வயதானவர்களே உரிய நினைவாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு அடிக்கடி பொதுமேடைகளில் உளறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் அவர் அதிபர் தேர்தலில் அவர் மீண்டும் டிரம்பை எதிர்த்து போட்டியிடுவதால் உறுதியாக இருந்ததால் குடியரசுக் கட்சி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.
இதனிடையே நேற்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவாக வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்ட நிலையில், தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரும்பாலான மாகாணங்களில் அதிக வாக்குகள் பெற்ற டிரம்ப் தற்போது வெற்றியை நெருங்கியுள்ளார்.
இதுவரை டிரம்ப் 230 எலெக்ட்ரோல் வாக்குகளை பெற்றுள்ள நிலையில், கமலா ஹாரிஸ் 210 எலெக்ட்ரோல் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். மேலும் முடிவுகள் வெளியாகாத பல மாகாணங்களில் டிரம்ப் அதிக வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அவரே அமெரிக்க அதிபராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
தமிழ்நாடு எதற்கெல்லாம் போராடும்... ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி !
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!