உலகம்
திடீரென கைது செய்யப்பட்ட Telegram நிறுவனர்... உலகையே அதிரவைத்த நிகழ்வுக்கு காரணம் என்ன?
நம் அன்றாட வாழ்வில் இணையம் இல்லாமல் நம்மால் இயங்க மிகவும் கடினம். இந்த இணையம் நாளடைவில் மனிதரின் வளர்ச்சியை தாண்டி, பல கேடான விஷயங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்களால் தற்போது ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் உள்ளிட்ட பல ஆப்களை பயன்படுத்தி தங்கள் தகவல் பரிமாற்றங்களுக்காக எளிதாக பயன்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் முக்கிய இடம்பிடித்துள்ள ஒன்றுதான் Telegram. இந்த ஆப் தற்போது உலகின் டாப் இடங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இந்த சூழலில் Telegram ஆப்பை கண்டுபிடித்த பாவெல் துரோவ் தற்போது பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதாவது தனது சொந்த விமானத்தில் அஜர்பைஜானில் இருந்து சென்ற பாவெல் துரோவை, பிரான்சில் உள்ள போர் கேட் விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்தது, போதை பொருள் விநியோகம், மோசடி உள்ளிட்ட குற்றசாட்டுகளின் கீழ் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவை சேர்ந்த பாவெல் துரோவ், Telegram செயலியை உருவாக்குவதற்கு முன்பு 2006-ம் ஆண்டு VKontakte என்ற செயலியை உருவாக்கினார். இது ரஷ்யா நாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு சமூக ஊடக தளம். நாளடைவில் இதில் அரசியல் குறித்த தகவல் பரிமாற்றங்கள் குறித்து, அரசு விதித்த நிபந்தனைகளுக்கு பாவெல் துரோவ் மறுத்துவிட்டார்.
இதையடுத்து அவர் டெலிகிராம் செயலியை உருவாக்கியபோதும் அரசு தரப்பில் இருந்து பல எதிர்ப்புகளை சந்தித்த அவர், வேறு வழியின்றி தனது சொந்த நாட்டை விட்டு கடந்த 2014-ம் ஆண்டு வெளியேறினார். இதைத்தொடர்ந்து 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் டெலிகிராம் தடை செய்யப்பட்டது. தற்போது இவர் செயின்ட் கிட்ஸ், ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம் , பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் குடியுரிமையை பெற்றுள்ளார்.
தற்போது உலக அளவில் முக்கிய செயலியாக விளங்கும் டெலிகிராம் பலருக்கும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வசதியில் உள்ளது. குறிப்பாக பி.எச்டி படிக்கும் மாணவர்களுக்கு இதில் இருந்து எளிதாக அவர்களுக்கு தேவையானவை கிடைக்கிறது. ஒரு பக்கம் நல்லது என்றாலும், மறுபக்கம் போதை பொருள் விநியோகம், சட்டத்துக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்த செயலியை ஒரு சிலர் எளிதாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் மூலம் குற்றங்களுக்கு இந்த செயலி அனுமதி வழங்கி வருவதாக கருத்துகள் நிலவி வருகிறது. இதன் காரணமாக தற்போது பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை உலக மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்தியாவில் கூட அண்மையில் இளநிலை நீட் தேர்வு வினாத்தாள், நெட் தேர்வின் வினாத்தாள் உள்ளிட்டவைகள் டெலிகிராமில் கசிந்தது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!