உலகம்
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்... உக்ரைனில் இருந்து மோடி கிளம்பிய அடுத்த நாளே நடந்த அதிர்ச்சி சம்பவம் !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
இந்த போரில் இந்தியா நேரு காலத்திய அணிசேரா கொள்கையை கடைபிடித்து நடுநிலையை பேணி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி மேற்கு நாடுகளால் புறக்கணிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கு கடந்த ஜூலை மாதம் சுற்றுப்பயணம் செய்தார்.அதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கு மோடி சுற்றுப்பயணம் செய்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது அமைதி பேச்சுவார்த்தையை நடத்துமாறு இந்தியா சார்பாக வலியுறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், மோடி உக்ரைனில் இருந்து கிளம்பிய அடுத்த நாளே உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி,12 பேரை படுகொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில், ரஷ்யாவின் எல்லைப்புற நகரான கிராமாட்ரோஸ்க் நகரில் உள்ள விடுதியில் உக்ரைன் படையினர் தங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரஷ்ய படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 12 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் அதில் மூன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒருவர் உக்ரைன் பத்திரிகையாளர்என்றும் , மற்ற இருவர் அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் ரஷ்யாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!