உலகம்
இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்திய ஹமாஸ் : அபாய சைரன்களை ஒலிக்கவிட்ட இஸ்ரேல் அரசு !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.
ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியுள்ளது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில், 90 சதவீத காசாவின் பரப்பு இஸ்ரேலில் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தாக்குதல் இதுவரை 35 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் மீது மிகப் பெரிய ஏவுகணை தாக்குதலை ஹமாஸ் அமைப்பு நடத்தியுள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் படைப்பிரிவான அல்-கஸ்ஸாம் வெளியிட்ட அறிவிப்பில், "இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டெல்அலிவ் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் காசாவில் இருந்து ஏவப்பட்டுள்ளது"என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஏவுகணைகள் இஸ்ரேலின் தடுப்பரண் அமைப்பு தடுத்து நிறுத்தியதாகவும், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஹமாஸின் தாக்குதலை முன்கூட்டியே அறிந்த இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன்களை ஒலிக்கவிட்டுள்ளது. ஹமாஸின் இந்த தாக்குதல் பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.50 ஆயிரம் மாமுதல் கேட்டு மிரட்டும் தவெக நிர்வாகி : புதிதாக வீடு கட்டி வரும் பெண் பரபரப்பு புகார்!
-
வாகனம் மோதியதால் ஏற்பட்ட தகராறு : இளைஞர் கத்தியால் குத்தி கொலை - சென்னையில் பரபரப்பு!
-
கரூர் துயரம் - விஜய் இதில் இருந்து தப்ப முடியாது ; இந்தப் பாவம் சும்மா விடாது : முரசொலி ஆவேசம்!
-
“It is grossly insensitive.. உங்களுக்கு தான் Class எடுக்கணும்...” - கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்!
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!