உலகம்
இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமான காசா: கட்டட கழிவுகளை அகற்ற 14 ஆண்டுகள் தேவைப்படும் - ஐ.நா தகவல் !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.
அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 34 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமான காசா பகுதிகளில் கழிவுகளை முழுமையாக அகற்ற குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் தேவைப்படும் என ஐ.நா. தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா சபையின் சுரங்க நடவடிக்கை துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "காஸா முழுவதும் 37 மில்லியன் டன் குப்பைகள் கிடக்கின்றன.இஸ்ரேலில் தாக்குதலில் பள்ளிகள், மசூதிகள் , அடுக்குமாடி குடியிருப்புகள் என ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளது.இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமான காசா பகுதிகளில் கழிவுகளை முழுமையாக அகற்ற குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் தேவைப்படும்.
இதற்கு பேரிடர் மற்றும் களப்பணியாளர்கள் சுமார் 7 லட்சத்துக்கு 50 ஆயிரம் பேர் தேவைப்படுவர்.போரின்போது வீசப்படும் குண்டுகளில் குறைந்தது 10 சதவீதமாவது வெடிக்காமல் நிலத்தில் புதைந்திருக்கும். அவற்றையும் அப்புறப்படுத்தவேண்டும். மக்கள் தொகை அதிகமுள்ள காஸாவில் இது மிகவும் சவாலானது"என்று கூறியுள்ளார்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!