உலகம்

இளம்பெண் கண்ணில் அரிப்பு... பரிசோதனையில் கண்களில் இருந்த 60 உயிருள்ள புழுக்கள் - ஷாக்கான மருத்துவர்கள் !

சீனாவின் கன்மிங் என்ற பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு அண்மை காலமாக கண்களில் அரிப்பு பிரச்னை இருந்துள்ளது. ஆரம்பத்தில் அதற்காக சொட்டு மருந்து உள்ளிட்டவையை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அப்படியும் அது கேட்கவில்லை என்பதால், அந்த பெண் மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கே பரிசோதனை செய்ததில் அந்த பெண்ணின் கண்களில் வட்டபுழுக்கள் இருந்தது தெரியவந்தது.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனக்கு இது எப்படி ஆனது என்பது கூட தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் பயத்தில் என்ன செய்வதென்று யோசிக்கையில், இதனை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அகற்ற முடியும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து சம்பவத்தன்று அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அறுவை சிகிச்சையில் அந்த பெண்ணின் கண்களில் ஆரம்பத்தில் ஏதோ 5 -6 புழுக்கள் இருக்கும் என்று மருத்துவர்கள் எண்ணியிருந்த நிலையில், சுமார் 60 புழுக்களை அகற்றியுள்ளனர். அதில் வலது கண்ணில் 40 உயிருள்ள புழுக்களும், இடது கண்ணில் 10 க்கும் அதிகமான புழுக்களும் இருந்தன. தற்போது அந்த பெண் நலமாக உள்ளதாகவும், அவரது கண்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற புழுக்கள், பொதுவாக வளர்ப்பு பிராணிகள் மூலம் நமது கண்களுக்கு தொற்றி கொள்ளும். இந்த பெண்ணுக்கு இந்த வட்டபுழுக்கள் தாக்கப்பட்டதற்கு காரணம் செல்லப் பிராணிகளாக கூட இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்ப்புகள், அதனை மிகவும் சுத்தமாக வைத்க்துகொள்ள வேண்டும் எனவும், அவர்களும் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read: தந்தை வாங்கிய கடனுக்காக கடத்தப்பட்ட மகன்.. 12 மணி நேரத்தில் மீட்ட போலிஸ் : பாஜக பிரமுகர் அதிரடி கைது !