உலகம்
அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல் : தரைமட்டமான குடியிருப்புகள் - போர் குற்றம் என விமர்சித்த ஐ.நா !
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த சூழலில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த வாரம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ் அமைப்பின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 7 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் காசாவுக்கு செல்லும் குடிநீர், உணவுப்பொருள்கள், மருத்துவ பொருள்கள், மின்சாரம் ஆகியவற்றை இஸ்ரேல் அரசு தடுத்து வைத்துள்ளது.
இந்த நிலையில், காசாவில் இருந்த ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் விமான தாக்குதலை நடத்தியுள்ளது. ஹமாஸ் ராணுவ தளபதி இப்ராஹிம் பியாரி என்பவரை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த தாக்குதலில், அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட இந்த முகாம் தரைமட்டமாகியுள்ளது. இதன் காரணமாக இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது போர்க்குற்றம் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அகதிகள் முகாம் மீதான இஸ்ரேலிய தாக்குதலால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அழிவின் அளவைக் கருத்தில் கொண்டு போர்க்குற்றங்களுக்கு சமமாக கருதுகிறோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
Also Read
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
-
“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”
-
முதலமைச்சர் தொகுதியிலேயே... : பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்!