உலகம்

கூகுள் நிறுவனத்திற்கு ரூ.7000 கோடி அபராதம்.. நீதிபதி தொடர்ந்த வழக்கு : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இணையத்தில் நமக்கு ஏதாவது தேவை என்றால் கூகுள் தேடுபொறியைத்தான் நாம் பயன்படுத்துவோம். வேறு பல தேடுபொறிகள் இருந்தாலும் கூகுளைத்தான் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விதிகளை மீறி கூகுள் நிறுவனம் தங்களது பயனர்களின் விவரங்களையும் அவர்களது இருப்பிடங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் விதிமீறல்களை எதிர்த்து சாண்டா கிளாரா கவுண்டி உயர் நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் ராப் போன்டா வழக்குத் தொடுத்துள்ளார். அவரது மனுவில், "கூகுள் நிறுவனம் தங்களது வணிக லாபத்திற்காகப் பயனர்களின் அன்றாட நடவடிக்கை மட்டும் அவர்களது இருப்பிடத்தைக் கண்காணிக்கிறது. கூகுள் நிறுவனத்தின் இந்த விதிமீறலை ஏற்றுக்கொள்ள முடியாது" என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 7000 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் கூகுள் நிறுவனம் தனது மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேநேரம் ரூ.7000 கோடி அபராதத் தொகையைச் செலுத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் கூகுள் நிறுவனம் விதிகளை மீறியதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Also Read: "இவங்க பந்துவீச மாட்டாங்க, அவங்க பேட்டிங் செய்ய மாட்டாங்க" -இந்திய அணியை விமர்சித்த இங்கிலாந்து வீரர் !