உலகம்
மனைவியை துப்பாக்கியால் சுட்ட பாடி பில்டர்.. Insta லைவில் வீடியோ கொடூரம்.. பின்னணி என்ன ?
ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது போஸ்னியா & ஹெர்ச்கோவியா (Bosnia and Herzegovina). இங்கு க்ரடகாக் (Gradacac) என்ற நகரத்தில் நெர்மின் சுலெமனோவிக் (Nermin Sulejmanovic) என்ற 38 வயது வாலிபர் வசித்து வருகிறார். அங்கு பிரபலமான பாடி பில்டராக இருந்து வரும் இவருக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இந்த சூழலில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் லைவில் இன்று ஒரு கொலை பார்ப்பீர்கள் என்று தனது followers-க்கு பதிவிட்டிருந்தார். தொடர்ந்து அவர் தனது லைவில் வந்து பெண் ஒருவரை தனது அருகில் அமரவைத்து, தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக்கொன்றார். இந்த தாக்குதலில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு கிடைக்கப்பட்ட தகவலின் பேரில், அந்த பாடி பில்டர் வீட்டுக்கு விரைந்தனர். அப்போது அவர்களை கண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். தப்பி செல்லும் வழியில் அவரை பிடிக்க முயன்ற இருவரையும் அவர் சுட்டுள்ளார். பின்னர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி விசாரிக்கையில் அந்த நபர் சுட்டுக்கொன்றது, அவரது முன்னாள் மனைவி என்றும், அவருக்கு ஒரு குழந்தை இருப்பதை இவரிடம் தெரிவிக்கவில்லை என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தது தெரியவந்தது. எனினும் அவர், தனது முன்னாள் மனைவியை சுட்டு கொன்றது குறித்த பின்னணி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் லைவில் தனது முன்னாள் மனைவியை கொடூரமாக தாக்கி, துப்பாக்கியால் சுட்டு கொன்ற கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!