உலகம்
பிரபஞ்சம் தோன்றியது எப்போது? கணிப்புகளை தவிடுபொடியாக்கிய JAMES WEBB தொலைநோக்கி: புதிய ஆய்வு கூறுவது என்ன?
நாசாவால் அனுப்பட்ட உலகின் மிகவும் சக்தி வாய்ந்த திறன் கொண்ட ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியர் 5 ராக்கெட் மூலம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல ஆண்டுகள் தயாரிப்பு பணியில் உருவாக்கப்பட்டது. இந்த தொலைநோக்கி நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைக்குச் சென்று, தனது ஆய்வுப்பணியை மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது. சமீபத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அதிலும் விண்வெளியில் ஒரு சிறு விண்மீன் திரள்களை படம் எடுத்ததும், கரினா நெபுலாவை படம் எடுத்ததும் பெரிதும் பேசப்பட்டது.
மேலும் பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி நவீன மனித குலம் முன்பு அறிந்திடாத பல முக்கிய தகவல்களை விரைவில் அளிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இதனிடையே சமீபத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா அமைப்பு வெளியிட்டது. அதில் ஒரு புதிய நட்சத்திரங்கள் உருவாகும் பகுதி இடம்பெற்றிருந்தது.
இந்த நட்சத்திரத் தொகுதி 400 ஒளி ஆண்டுகள் தொலைவில், நமக்கு மிக அருகிலுள்ள, நட்சத்திரங்கள் உருவாகும் பகுதி என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது மெதுசெலா (Methuselah) போன்ற விண்மீன்களையும் மற்றும் மேம்பட்ட பரிணாம நிலைகளுடன் கூடிய ஆரம்பகால விண்மீன்களையும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது பிரபஞ்சம் குறித்த நமது புரிதலையே கேள்விக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இது வரை பிரபஞ்சம் உருவாகி 13.797 பில்லியன் ஆண்டுகள் இருக்கும் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் பிரபஞ்சத்தின் வயது இன்னும் பழமையாக இருக்கும் என்பதை உணர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய இந்த புகைப்படங்களின் படி, பெருவெடிப்பு 26.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே நடந்திருக்கும் என்றும், இதனால், பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த முந்தைய ஆய்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் (University of Ottawa) இயற்பியல் பேராசிரியர் ராஜேந்திர குப்தா புதிய ஆய்வு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
Also Read
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!