உலகம்
ஆபாசப் படம் பார்த்தீங்க.. facebook பக்கம் முடக்கம்: நீதிமன்றம் சென்று ரூ.41 லட்சம் இழப்பீடு பெற்ற பயனர்!
உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். இதில் தங்களுக்கு என்று தனியாக கணக்கு வைத்து அதில் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
சில நேரங்களில் தங்கள் பயன்படுத்தும் பேஸ்புக்கு கணக்கு திடீரென முடக்கப்பட்டு இருக்கும். இது குறித்து அந்த நிறுவனத்திடம் காரணம் கேட்டால், அவர்கள் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி இதனால்தான் உங்கள் கணக்கு முடக்கப்பட்டது என்று சொல்வார்கள்.
நாமும் அதை அப்படியே விட்டு விட்டு வேறு பெயரில் புது கணக்கைத் தொடங்கிவிடுவோம். நம்முடைய கணக்கு முடக்கப்பட்டதை பற்றி கொஞ்சம் கூட கவலைப் படாமல் நகர்ந்து விடுவோம்.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பயனர் ஒருவர் தனது கணக்கு முடக்கப்பட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் வரை சென்று ரூ.50 ஆயிரம் டாலர் இழப்பீடு பெற்றுள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜெசன் கிரவ்பொர்ட். இவருக்கு பேஸ்புக்கில் கணக்கு ஒன்று வைத்துப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது பேஸ்புக் பக்கம் திடீரென முடக்கப்பட்டது. இது குறித்து அந்நிறுவனத்திடம் விலக்கம் கேட்டுள்ளார்.
இதற்கு அவர்கள், நீங்கள் குழந்தைகள் தொடர்பான ஆபாச பதிவுகளைப் பார்த்தால் உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என விளக்கம் கொடுத்துள்ளனர். இதற்கு அவர், அப்படி ஒரு பதிவுகளைத் தான் பார்க்கவில்லை. எனது கணக்கை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்ட வர உதவ வேண்டும் என கூறியுள்ளார்.
ஆனால் இவரது பதிவை பேஸ்புக் நிறுவனம் ஏற்க மருத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெசன் பேஸ்புக் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் ஜெசனின் கணக்கு முடக்கியதற்கான காரணத்தை பேஸ்புக் நிறுவனத்தால் தெரிவிக்க முடியவில்லை. இதையடுத்து நீதிமன்றம் 50 ஆயிரம் டாலர் இழப்பீடு தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. (இந்திய மதிப்பில் ரூ.41 லட்சத்து 11 ஆயிரத்து 250)
இந்த உத்தரவை அடுத்து முடக்கப்பட்ட ஜெசன் கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் இழப்பீட்டுத் தொகையை பேஸ்புக் நிறுவனம் இன்னும் வழங்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!