உலகம்
அனுமதியின்றி ரகசிய புகைப்படம்.. பாலியல் சுரண்டலை தடுக்க தேசிய அளவிலான சட்டத்தை அமல்படுத்தும் ஜப்பான் !
பூமிப்பந்தில் வடக்கு பக்கத்தில் அமைந்துள்ள ஜப்பான் நாடு அதிக குளிர்ச்சியாக நாடுகளில் ஒன்றாகும். அங்கு சராசரி ஆண்டு வெப்பம் 10.82 என்ற அளவிலேயே இருந்துவருகிறது. இதனால் அங்கு பொதுமக்கள் அதிகமாக வெந்நீர் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
மேலும் அரசு சார்பில் அங்கு முக்கிய இடங்களில் வெப்ப நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜப்பான் நாட்டு பொதுமக்களையும் தாண்டி இந்த வெப்ப நீரூற்றுகளுக்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தினசரி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக இந்த வெப்ப நீரூற்றுகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், வெந்நீர் ஊற்றுகளில் குளிக்கும் பெண்களை சிலர் ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி போலிஸார் நடத்திய சோதனையில், பெண்கள் குளிக்கும் காட்சிகளை புகைப்படம் எடுத்ததொடர்பாக டாக்டர் ஒருவர் உட்பட 17 பேரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருள்களை சோதனையிட்டதில் 10,000 பேரின் ஆபாசமான புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் இருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நாடு முழுவதும் உள்ள 100க்கும் மேற்பட்ட வெந்நீர் ஊற்றுகளில் குளித்த பெண்களில் புகைப்படங்கள் அவர்களிடம் இருப்பதாகவும் அதை பல்வேறு இணையதளங்களுக்கு விற்பனை செய்த தகவலும் வெளியாகியுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், தற்போது சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலின்றி அவர்களை பாலியல் ரீதியாக புகைப்படம் எடுப்பதை தடை செய்யும் சட்டமசோதா ஜப்பானில் முதல் முறையாக தேசிய அளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் ஒருவரின் அரை நிர்வாணம் அல்லது முழு நிர்வாணத்தை சம்மந்தப்பட்டவரின் அனுமதியின்றி பிறர் படமெடுப்பதை இந்த மசோதா தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கவுள்ளது.
இந்த மசோதா நிறைவேறினால் , குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 3 மில்லியன் ஜப்பானிய யென்வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. நாளுக்கு நாள் ஜப்பானின் இதுபோன்ற குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!