உலகம்
'GOD' பெயரில் இயங்கிவந்த ட்விட்டர் கணக்கை BLOCK செய்த எலான் மஸ்க்.. இதுதான் காரணமா ?
உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கியுள்ளார்.ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டனர்.மேலும் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் தனது முடிவில் எலான் மஸ்க் பின்வாங்காமல் இருந்தார். மாத சந்தா செலுத்தக் கூடிய யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் என மஸ்க் திருத்தம் செய்திருந்ததால் சந்தா கட்டிய எல்லாருக்கும் எந்த சரிபார்ப்பும் இல்லாமல் ப்ளூ டிக் வழங்கப்பட்டது.
இதனால் jesus, God என்று பலபெயர்களில் ட்விட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டது. அதற்கும் ப்ளூ டிக் வழங்கப்பட்டது. இதில் God (Not a Parody, Actually God) என்ற ட்விட்டர் பக்கத்தை அமெரிக்க எழுத்தாளர் டேவிட் ஜாவர்பாம் பயன்படுத்தி வருகிறார்.
இதில் பல்வேறு கேலி, கிண்டல் பதிவுகளை பதிவிட்டு வருகிறார். அதிலும் எலான் மஸ்க்கை கடுமையாக கிண்டல் செய்து வருகிறார். எலான் மஸ்க் குறித்த அவரின் பதிவுகள் பல்லாயிரகணக்கானோரை சென்றடைந்து வந்தது. இவரின் இந்த பக்கத்தை 60 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.
இந்த நிலையில், தன்னை தொடர்ந்து கிண்டல் செய்து வந்த இந்த God -ன் பக்கத்தை எலான் மஸ்க் ப்ளாக் செய்துள்ளது தெரியவந்தது. இதனை அமெரிக்க எழுத்தாளர் டேவிட் ஜாவர்பாம் பதிவிட்டு எலான் மஸ்க் தன்னை ப்ளாக் செய்ததை அறிவித்துள்ளார். அதோடு எலான் மஸ்க் எப்படிப்பட்டவர் என்பதை காட்டவே இதை பதிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
Also Read
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!
-
“ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தமிழ்நாட்டின் குரல்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
20 Volvo அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள்! : சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!