தமிழ்நாடு

அதிமுக கிளைச் செயலாளர் உட்பட 3 பேர் கைது: கிருஷ்ணகிரி இளைஞர் கொலை வழக்கு குறித்து முதலமைச்சர் விளக்கம்!

கிருஷ்ணகிரி கொலை சம்பவத்தில் அ.தி.மு.க கிளைச் செயலாளருக்கு தொடர்பு உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக கிளைச் செயலாளர் உட்பட 3 பேர் கைது: கிருஷ்ணகிரி இளைஞர் கொலை வழக்கு குறித்து முதலமைச்சர் விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத் தொடர் மார்ச் 20ம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வாசித்தார். இதையடுத்து இன்று மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜெகன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அதிமுக கிளைச் செயலாளர் உட்பட 3 பேர் கைது: கிருஷ்ணகிரி இளைஞர் கொலை வழக்கு குறித்து முதலமைச்சர் விளக்கம்!

பின்னர் இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், " கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட, ஜெகன் என்ற இளைஞர் மார்ச் 21ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது ஜெகனை, அ.தி.மு.க கிளைச் செயலாளர் சங்கர் உள்ளிட்ட 3 பேர் ஆயுதங்களால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், சங்கரின் மகள் சரண்யாவை, ஜெகன் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு அழைத்து சென்று கோவிலில் வைத்து கடந்த ஜனவரியில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற சங்கர் உள்ளிட்டோர் ஜெகனை கொலை செய்துள்ளனர்.

அதிமுக கிளைச் செயலாளர் உட்பட 3 பேர் கைது: கிருஷ்ணகிரி இளைஞர் கொலை வழக்கு குறித்து முதலமைச்சர் விளக்கம்!

இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க கிளைச் செயலாளார் சங்கர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய விழிப்புணர்வை காவல்துறை சார்பிலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து சமூகநீதியை பேணிக்காக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories