உலகம்
"ட்விட்டரை தொடர்ந்து திவாலான வங்கிக்கு ஸ்கெட்ச் போட்ட எலான் மஸ்க்" -இணையவாசிகள் கிண்டல் !
உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான மெயில் அனுப்பப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்ட நிலையில், எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், நன்றாக சென்றுகொண்டிருந்த ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி நாசம் செய்து வருவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தற்போது அமெரிக்காவின் 16-வது பெரிய வங்கியான சிலிக்கான் வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வராக்கடன் பாதிப்பால் நஷ்டத்துக்குள்ளான அந்த வங்கி கடன் பத்திரங்களை ரூ.14,000 கோடி நஷ்டத்தில் விற்பனை செய்த தகவல் வெளியானது. இதனால் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை திரும்ப பெற்ற நிலையில், அந்த வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரேஸர் என்ற நிறுவனத்தின் CEO-வான மின் லியங்க் டன் என்பவர் தனது ட்விட்டர் பதிவில், "சிலிக்கான் வங்கியை டிவிட்டர் வாங்கி, டிஜிட்டல் வங்கி ஆக மாற்றலாமே" எனக் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க் ''அதைப் பற்றி யோசிக்கிறேன்'' எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்து சிலிக்கான் வங்கியை எலான் மஸ்க் வாங்கி என்ன செய்யபோகிறாரோ என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!