உலகம்
வேலைக்கு ஆள் தேவை.. “விளம்பரம் கொடுத்தது ஒரு குத்தமா”: 6 லட்சம் அபராதம் விதித்த அதிகாரிகள் -நடந்தது என்ன?
பொதுவாக பெரிய பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை என்று சில தகுதியுடன் விளம்பரம் செய்வர். டிஜிட்டல் உலகம் என்பதால் இவை அனைத்தும் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டு பகிரப்படும்.
ஆனால் சில குறு நிறுவனங்கள் உள்ளிட்டவை தங்களுக்கு ஆட்கள் தேவை என்று வேறு விதமாக விளம்பரம் செய்வர். அதே போல் அதைவிட சிறு தொழிலாக கருதப்படும், துணிக்கடை, மளிகை கடை, மெடிக்கல் உள்ளிட்டவைகளுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்றால், அவர்களது கடை முன்பே விளம்பரம் செய்வர். அவ்வாறு அவர்கள் விளம்பர படுத்தும்போது தங்களுக்கு இந்த பாலினம் ஆட்கள், இத்தனை வயதில் தேவை என்று குறிப்பிடுவர்.
இது இங்கு மட்டுமல்லாமல், உலக அளவில் காணப்படும் ஒன்றாகும். அப்படி துணிக்கடை உரிமையாளர் ஒருவர், தனது கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்தபோது குறிப்பிட்ட பாலினம், வயது தேவை என்று விளம்பர படுத்தியுள்ளார். இது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ளது பார்சிலோனா. இங்கு ஃபோர்ட் பியன்க் என்ற பகுதியில் இருப்பவர் ஜேவியர் மார்கோஸ். இவர் சொந்தமாக ஒரு சிறிய திரைச்சீலை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது கடையில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்த பெண் விரைவில் வேலையை விட்டு ஒய்வு எடுக்கவுள்ளதால், அவரது கடைக்கு வேறு ஒரு பெண் ஊழியர் தேவை என்று விளம்பரம் செய்ய எண்ணினார். அதன்படி '40 வயதுக்கு மேற்பட்ட பெண் வேலைக்கு தேவை என்று விளம்பரம் செய்தார். இவரது விளம்பரம் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இதனை கண்ட தொழிலாளர் ஆய்வாளர் ஒருவர், மார்கோஸ் பாரபட்சம் காட்டுவதாக கூறி அவரை கண்டித்துள்ளார். இதையடுத்து அவர் தனது விளம்பரத்தை இணையத்தில் இருந்து அகற்றியுள்ளார். இருப்பினும் அந்த ஆய்வாளர் இவருக்கு €7,501 (இந்திய மதிப்பில் 6 லட்சத்து 62 ஆயிரம்) அபராதம் விதித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட துணிக்கடை உரிமையாளர் கூறுகையில், “யாரிடமும் பாரபட்சம் காட்டும் எண்ணம் எனக்கு இல்லை. உண்மையில், வேலை கிடைப்பது கடினமாக இருக்கும் ஒரு குழுவினருக்கு நான் ஒரு வாய்ப்பை வழங்க விரும்பினேன். இது ஒரு சிறு வணிகம். இதற்கு அபராதம் விதிக்கப்பட்ட தொகை மிகவும் அதிகம்.
தற்போது கட்டலானிய அரசாங்கம் தீயணைக்கும் தொழிலில் அதிக பெண்களை ஈர்க்கும் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. இதற்காக "FemEquip" என்ற முழக்கத்துடன் ஒரு ஆட்சேர்ப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது "நாங்கள் ஒரு குழுவை உருவாக்குகிறோம்" மற்றும் "பெண்கள் அணி" என இரு பொருள்படும் ஒரு சிலேடையாகும்.
தீயணைப்பு வீரர்களில் 2% பேர் மட்டுமே பெண்கள் இருக்கிறார்கள்; இதை ஒப்பிட்டு பார்க்கையில் எனது விளம்பரத்திற்கும் அவர்களின் விளம்பரத்திற்கும் என்ன வித்தியாசம்?” என்று மார்கோஸ் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “சில ஆண்டுகளுக்கு முன்பு பார்சிலோனாவில் உள்ள Barcelona bar Entrepreneurs DÃaz என்ற பார் ஒன்று, தங்களுக்கு 50 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் தேவை என்று விளம்பரம் செய்தது; ஆனால் அதற்கு அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை.
மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களை நியமிக்க காரணம், அவர்கள் அருமையாக வேலை செய்வார்கள்; அதுமட்டுமின்றி சமூகம் அவர்களை வேலை சந்தையில் இருந்து அநியாயமாக வெளியேற்றி வருகிறது என்று அதற்கு அந்த பாரின் உரிமையாளர் விளக்கமும் அளித்தார்” என்றார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!