உலகம்
விஷமாகும் இருமல் மருந்து.. காம்பியா நாட்டை அடுத்து உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் பலி!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்து காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழந்ததை அடுத்து தற்போது உஸ்பெகிஸ்தானிலும் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தான டாக் 1 மேக்ஸ் என்ற மருந்தைக் குடித்ததால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டாக் 1 மேக்ஸ் இருமல் மருந்தைக் குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதையடுத்து அந்த மருத்தை ஆய்வு செய்தபோது அதில் எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதேபோல் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு 7 நாட்களுக்கு வீட்டிலிருந்தபோது 2.5 முதல் 5 மில்லி அளவுக்கு டாக் 1 மேக்ஸ் இருமல் மருந்தை குடித்துள்ளனர். இது அளவை மீறியதாகும்.
18 குழந்தைகள் மரணத்திற்குப் பிறகு நாட்டில் அனைத்து மருந்தகங்களில் இருந்தும் டாக் 1 மேக்ஸ் மருந்துகள் மற்றும் சிரப்புகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த மருந்தை ஆய்வு சரியாகச் செய்யாத 7 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்து காம்பியா, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?