உலகம்
ராணுவ வீரர்கள் சிறைபிடிப்பு.. பதிலடி கொடுத்த ராணுவம்.. பாகிஸ்தானின் தொடரும் தாலிபான்களின் அட்டகாசம் !
ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.
அதோடு அங்கு தாலிபனுக்கு எதிரான அமைப்புகள் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்ற நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லை பிரச்னைகள், பயங்கரவாதம் தொடர்பாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வர உதவினாலும் தற்போது எதிர்தரப்புக்கு பாகிஸ்தான் உதவுவதாக தாலிபான் தலைவர்கள் கருதி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதாக தாலிபான் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த பதட்டமான சூழலில் பாகிஸ்தானின் செயல்பட்டு வரும் தாலிபான் அமைப்பின் துணை அமைப்பான 'தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான்' எனும் அமைப்பினரை பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த பயங்கரவாத எதிர்ப்பு படையினர் கைது செய்தனர். மேலும் அவ்ர்களிடமிருந்த ஆயுதத்தையும் பறிமுதல் செய்தனர்.ர்.
இதற்கு பழிவாங்கும் விதமாக பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் மீது தாலிபான் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தி அந்த மையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். மேலும் அங்கிருந்த ராணுவ வீரர்கள் சிலரை கொலை செய்த அவர்கள், சிலரை பணயக்கைதியாக பிடித்து வைத்தனர். அதோடு தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களை விடுவிக்கவேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
எனினும் பாகிஸ்தான் ராணுவம் கிட்டத்தட்ட 40 மணி நேரம் தாலிபான்களோடு சண்டையிட்டு அவர்களை வீழ்த்தி இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். 33 தாலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அனைத்து பணையக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், "இந்த தாக்குதலால் ராணுவத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர் என்றும், 10 முதல் 15 ராணுவ வீரர்கள் காயமடைந்திருக்கின்றனர்" என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரம் பாகிஸ்தானின் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!