உலகம்

திருமணத்தை தாண்டிய உறவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை.. புதிய சட்டத்தை அமல்படுத்துகிறது இந்தோனேஷியா..

அந்த காலத்தில் இருந்து இப்போது வரை, மனிதர்கள் (பெண், ஆண்) சிலர் திருமணம் செய்து கொண்டாலும், அதை தண்டியும் காதல் ஏற்பட்டு உறவில் இருந்து வருகின்றனர். முன் காலத்தில் இந்தியாவில் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும், இதற்காக தனி சட்டம் இயற்றப்பட்டு முறையாக விவாகரத்து பெற்ற பிறகே தங்களுக்கு விரும்பிய வாழ்க்கையை ஒரு நபரால் தேர்ந்தெடுக்க முடிகிறது.

இது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இது போல் நிகழ்ந்து வருகிறது. இது போன்ற உறவால் நாள்தோறும் பலரது உயிர் காவு வாங்கப்படுகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க பலரும் பல யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இதனால் அந்தந்த நாட்டுக்கு என்று தனிச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தோனேசியா நாடு இதற்காக புதிய சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது தெற்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் சுமார் 27 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள், வெளிநாட்டவர் என அதிகமானோர் வந்து செல்வர்.

இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு திருமணத்தை தாண்டியிற் உறவு கொண்டால் அவர்களுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சட்டம் கொண்டுவரவுள்ளது. இந்த சட்டம் இந்தோனேசிய குடிமக்களுக்கு மட்டுமல்லாமல் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள், தொழில் சார்ந்த பயணிகள், அங்கே குடியிருக்கும் வெளிநாட்டவர் என அனைவரும் பொருந்தும் என அறிவித்துள்ளது.

அதோடு திருமணம் செய்துகொண்ட கணவனோ, மனைவியோ வேறொருவருடன் உடல் ரீதியான உறவில் இருந்தால் 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த சட்டம் முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு கொண்டுவர அந்த அரசு திட்டம் தீட்டியிருந்தது. ஆனால் அதற்கு அப்போது எதிர்ப்புகள் கிளம்பியிருந்ததால் இதனை அமல்படுத்தவில்லை.

இருப்பினும் இந்த சட்டம் அமல்படுத்தபட்டால் இந்தோனேசியா சுற்றுலாத்துறையில் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல், தொழில்துறையிலும் பெரும் தாக்கம் ஏற்படும் என்றும் முதலீட்டாளர்கள் இந்தோனேசியாவில் முதலீடு செய்வதை மறு பரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. வரும் வாரங்களில் இந்த சட்டம் அதிகாரபூர்வமாக அமல்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also Read: “திமுக இயக்கத்தை எந்த கொம்பனாலும், தொட்டு கூட பார்க்க முடியாது..” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!