உலகம்
“சடலத்தை எப்படி மறைப்பது?” சிறுமியை கொன்று INSTA தோழியிடம் ஐடியா கேட்ட இளைஞர்.. அலேக்காக தூக்கிய போலிஸ் !
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியை அடுத்துள்ளது பென்சலேம். இங்கு வசித்து வரும் இளைஞர் ஜோஷ்வா கூப்பர். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா தோழியிக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அதில், தான் ஒருவரை சுட்டு கொன்று விட்டதாகவும், அதன் சடலத்தை எவ்வாறு டிஸ்போஸ் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவையும் அனுப்பியுள்ளார். அந்த வீடியோவை ஓபன் செய்து பார்த்தபோது, அதில் இறந்து போன சிறுமி இரத்த வெள்ளத்தில் கிடந்தவாறு இருந்துள்ளது. இதனை கண்டதும் பயந்துபோன அந்த பெண், தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர்கள் காவல்துறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வந்து அந்த பெண்ணிடம் விசாரிக்கையில், அவர் ஜோஷ்வாவின் இன்ஸ்டா ஐடியை காண்பித்துள்ளார். பின்னர் குற்றம்சாட்டப்பட்ட ஜோஷ்வாவின் வீட்டை கண்டுபிடித்து, அவரை சுற்றி வளைத்தனர்.
ஆனால் போலீஸ் வருவதை அறிந்த ஜோஷ்வா, பிணத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பிக்க முயன்றுள்ளார். பின்னர் அவரை விரட்டி பிடித்த போலீசார், அவரை கைது செய்து வீட்டை சோதனை செய்தனர். அப்போது அங்கு குளியறையில் சிறுமி ஒருவரது சடலம் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது.
இதையடுத்து அந்த உடலை மீட்ட அதிகாரிகள் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜோஷ்வாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அவர் போதையில் இருக்கும்போது நடந்ததா அல்லது வேண்டுமென்று கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளைஞர் ஒருவர் சிறுமியை சுட்டு கொன்று விட்டு, சடலத்தை எப்படி மறைப்பது என்று தனது இன்ஸ்டா தோழியிடம் கேட்டு மாட்டிக்கொண்டு நிகழ்வு அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!