உலகம்
“உண்மையான வாலுடன் பிறந்த பெண் குழந்தையா..!” - அதிசய நிகழ்வு குறித்து மருத்துவர் அளிக்கும் விளக்கம் என்ன ?
மெக்சிகோவில் பெண் குழந்தை ஒன்று 2 அங்குல நீள வாலுடன் பிறந்துள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுவரை 195 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது.
மெக்சிக்கோ பகுதியில் நியூவோ லியோனில் உள்ள ஒரு மருத்துவமனை ஒன்றில், கடந்த சில மாதங்களுக்கு 2 அங்குல நீள வாலுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. வாலுடன் பிறந்த இந்த குழந்தை உலகில் அரிய குழந்தையாக கருதப்படுகிறது. ஏனெனில் உலகிலேயே இதுவரை சுமார் 195 குழந்தைகள் மட்டுமே இதுபோன்று வாலுடன் பிறந்துள்ளது.
இந்த நிகழ்வு குறித்து அந்த மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், "நிறைமாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு, 5.7 செ.மீ நீளத்தில் (2 அங்குலம்) மென்மையாகவும், கூர்மையாகவும் வால் ஒன்று காணப்பட்டது. தோலால் மூடப்பட்ட நிலையில் இருந்த அந்த வாலில் மெல்லிய ரோமங்களும் இருந்தன. அந்த வால், கூர்மையான முனையை நோக்கி குறுகிக் காணப்பட்டது.
மெக்சிக்கோவில் இப்படி ஒரு குழந்தை பிறப்பது இதுதான் முதல் முறை. அந்த வாலை தொட்டு அசைக்கும்போது குழந்தை எந்த வலியையும் உணரவில்லை. ஆனால் ஊசியால் குத்தியபோது குழந்தை வலியை உணர்ந்து கத்தியது.
குழந்தைக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த வால் அகற்றப்பட்டது. மேலும் அதை ஆய்வுக்கு அனுப்பினோம். தசை மற்றும் நரம்புகளைக் கொண்ட உண்மையான வால் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது விலங்குகளுக்கு இருப்பது போன்று எலும்புகளற்றது என்பது தெரியவந்தது" என்றார்.
இது போன்ற நிகழ்வு மிகவும் அரிதானது என்பதால், இதுவரை 195 குழந்தைகள் இது போன்று வால் வைத்து பிறந்துள்ளது. அப்படி பிறந்த 17 குழந்தைகளில் ஒரு குழந்தை மூளை அல்லது மண்டை ஓட்டின் வளர்ச்சிக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறது. அதற்கான காரணத்தை மருத்துவ ஆராய்ச்சியில் இன்னும் கண்டறியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 2025 : தங்கப்பதக்கம் வென்ற தீக்ஷாவுக்கு துணை முதல்வர் பாராட்டு!
-
ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
-
காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
-
“இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
-
முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !