உலகம்

தங்கத்தை தேடி சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. உலகில் எங்கும் கிடைக்காத அரிய வகை கல் கண்டுபிடிப்பு !

ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் ஹோலே என்பவர் தங்க வேட்டையில் அதிக ஆர்வம் கொண்டவர்.இவர் பல்வேறு இடங்களில் தங்கத்தை தேடி அலைந்து வந்துள்ளார். இவருக்கு ஆஸ்திரேலிய நகரமான மெல்போர்ன் பகுதிக்கு வெளியே இருக்கும் ஆள் இல்லாத இடத்தில தங்கள் கிடைக்கும் என தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி கடந்த 2015- ஆம் ஆண்டு அந்த பகுதியில் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். 4 ஆண்டுகள் கடும் முயற்சியைத் தொடர்ந்து இவருக்கு பெரிய கடினமான கல் ஒன்று கிடைத்துள்ளது. இதனால் தங்கம் கிடைத்துவிட்டது என பெருமகிழ்ச்சியில் அதனை எடுத்து வந்துள்ளார்.

பின்னர் அதனை உடைக்க முயன்றவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ரம்பம், சம்மட்டி போன்றவற்றால் கூட அந்த கல்லை உடைக்கமுடியவில்லை. அதனைத் தொடர்ந்து அந்த கல்லில் ஏதோ மர்மம் இருக்கிறது என்பதை உணர்ந்த அவர் ஆய்வாளர்களிடம் இந்த கல்லை ஒப்படைத்து ஆய்வு செய்யகூறியுள்ளார்.

அதன்படி ஆய்வு செய்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஆய்வில் சூரிய குடும்பம் உருவாவதற்கு முந்தைய கால காட்டத்தை சேர்ந்த அரியவகை விண்கல் அது என்பது தெரியவந்துள்ளது. இதன் மதிப்பு தங்கத்தை விட பல மடங்கு அதிகமானதாகும்.

இந்த கல் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த விண்கல் என்பதும், வளிமண்டலம் வழியாக வரும் போது அதிக வெப்பத்தால் வெளிப்புறத்தில் உருகி அதன்பிறகு ஒன்று திருண்டு இப்படி அரிய கல்லாக மாறியிருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும், இதனை ஆய்வு செய்வதன் மூலம் சூர்யகுடும்பம் உருவாக்கம் பற்றி தெரிந்துகொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: பாக். இல்லாவிட்டால் உலகக்கோப்பை தொடரை யார் பார்ப்பார்கள்.. BCCI-க்கு பாகிஸ்தான் வாரியம் எச்சரிக்கை !