உலகம்
காதலன் வீட்டை கொளுத்தி வீடியோ எடுத்து அனுப்பிய காதலி.. விசாரணையில் போலிஸ் ஷாக்!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் செனைடா மேரி சொடோ. இளம் பெண்ணான இவர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். மேலும் காதலர்கள் இருவரும் ஃபேஸ்டைம் எனும் ஆப்பில் வீடியோ சாட் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கம்போல் செனைடா மேரி காதலனுக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது காதலனுக்குப் பதில் பெண் ஒருவர் அழைப்பை ஏற்றிப் பேசி இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் காதலி செனைடா மேரி காதலன் மீது சந்தேகம் அடைந்துள்ளார்.
உடனே காதலன் வீட்டிற்குச் சென்று, அங்கிருந்த சில பொருட்களைத் திருடியுள்ளார். பின்னர் வீட்டை தீ வைத்து கொளுத்தி அதை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பியுள்ளார். இந்த வீடியோவை பார்த்து காதலன் அதிர்ச்சியடைந்து வெளியே ஓடிவந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸாரும்,தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்து தீயை அணைத்துள்ளனர். ஆனால் அதற்குள் தீயில் வீடு முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. இதையடுத்து போலிஸார் செனைடா மேரியை கைது செய்து விசாரணை செய்ததில், காதலன் வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் இருந்ததால்தான் கொளுத்தினேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பின்னர் இது குறித்துப் பேசிய காதலன், "வீட்டிலிருந்த பெண் உறவுக்காரர். அவர் எனது பெற்றோரைச் சந்திக்க வந்தார். அப்போது அவர் விளையாட்டாக எனக்கு வந்த அழைப்பை எடுத்து விட்டார். இதைக் காதலி தவறாக நினைத்துக் கொண்டு இப்படிச் செய்வார் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!