உலகம்
போலி கணக்கு.. ஆள்மாறாட்டம்.. இனி ட்விட்டரில் வெவ்வேறு நிறத்தில் Tick குறியீடு.. எலான் மஸ்க் ஆலோசனை !
உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும் தனது முடிவில் எலான் மஸ்க் பின்வாங்காமல் இருந்தார். தற்போதைய நிலையில், இந்த கட்டணவிதிப்பு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில், பலரும் அதற்கான தொகையை செலுத்திவருகின்றனர்.
மேலும், மாத சந்தா செலுத்தக் கூடிய யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் என மஸ்க் திருத்தம் செய்துள்ளார். இதன் காரணமாக சந்தா கட்டிய எல்லாருக்கும் எந்த சரிபார்ப்பும் இல்லாமல் ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பலர் போலியான பெயரில் இந்த ப்ளூ டிக்கை பெற்றுள்ள சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முன்னணி நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் பெயரில் போலி ப்ளூ டிக் கொண்ட கணக்குகள் வலம்வருவது ட்விட்டர் மீதான நம்பிக்கையை குலைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து ப்ளூ டிக்' சந்தா வழங்குவதை டிவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியது. இது குறித்து பேசிய எலான் மஸ்க் வரும் 29ம் தேதி முதல் ப்ளூ டிக் பெறும் திட்டம் மறுவெளியீடு செய்யப்படும் என்றும், இம்முறை இத்திட்டம் மேலும் உறுதியாக செயல்படுத்தப்படும் என்றும் எலான் மஸ்க் கூறியிருந்தார்.இந்த நிலையில், தனது கருத்தில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " ப்ளூ டிக் மறுவெளியீட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம். ஒரு போலி நபர் கூட இல்லை, ஆள்மாற்றாட்ட பிரச்சினையை இல்லை என்ற நம்பிக்கை வந்தபின்னர் இதுபற்றி பரிசீலிப்போம். நிறுவனங்களுக்கு, தனியாருக்கு என தனித்தனியாக வெவ்வேறு நிறத்தில் டிக் வழங்குவது பற்றி ஆலோசித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ஞானேஷ் குமார் 48 மணிநேரத்திற்குள் பதவி விலக வேண்டும்! : அபிஜித் திப்கே எச்சரிக்கை!
-
நேற்று விஜய் அறிவுறுத்தல்.. ஆனா இன்று.. ஒரே நாளில் தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் அடுத்தடுத்து மின்வெட்டு!
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!
-
BoyFriend உடன் சேர்ந்து Blackmail.. மிரட்டி பணம் பறிப்பு.. தவெக பிரமுகர், BIGG BOSS வர்ஷினி வெங்கட் கைது!
-
டம்மியின் இடைத்தேர்தல் பிரச்சார ஸ்கிரிப்ட் ரெடியா virtual abusers? : DMK IT WING கேள்வி!