உலகம்
உலக புகழ் பெற்ற Power Rangers தொடரின் நடிகர் தற்கொலை?.. 90'S கிட்ஸ்கள் அதிர்ச்சி!
90ஸ் கிட்ஸ்களின் வேறு உலகத்திற்கு அழைத்துச் சென்ற தொடர் என்றால் அது பவர் ரேஞ்சர்ஸ் தொடர்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அளவிற்கு இப்போதும் ரெட் ரேஞ்சர், கிரீன் ரேஞ்சர்கள் 90ஸ் கிட்ஸ்களின் மனதில் குடிகொண்டுவிட்டனர்.
1993ல் சூப்பர் செண்டாய் என்ற ஜப்பானியத் தொடரைத் தழுவி பவர் ரேஞ்சர்ஸ் தொடர் எடுக்கப்பட்டது. 1993 முதல் 1996 வரை 4 ஆண்டுகள் 124 எபிசோடுகளாக தொடர் வெளிவந்தது. இந்த தொடர் சூப்பர் ஹீரோ தொடர்களிலிருந்து வேறுபட்டு இருந்ததால் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த தொடரில் கிரீன் ரேஞ்சராக நடித்த ஜேசன் டேவிட் ஃபிராங்க் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது. ஆனால் அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என்பதை போலிஸார் உறுதி செய்யவில்லை.
இவரின் இறப்புச் செய்தியை அடுத்து பவர் ரேஞ்சர்ஸ் தொடரின் ரசிகர்கள் ஜேசன் டேவிட் ஃபிராங்க்-குக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவருக்கு இரண்டு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
மேலும் இவர் தனது இரண்டாவது மனைவி டாமி ஃபிராங்கை கடந்த ஆகஸ்ட் மாதம் விவாகரத்து செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரது மர்ம மரணம் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் பவர் ரேஞ்சர் தொடரில் எல்லோ ரேஞ்சராக நடித்த துய் ட்ராங் கடந்த 2001ம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன்: அதிரடியான தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : 51 முக்கிய அம்சங்கள்!
-
TN Election 2026 : திமுக கூட்டணியில் CPI-க்கு 5 தொகுதிகள்... வேட்பாளர்கள் யார்? - விவரம் உள்ளே!
-
5 மாவட்டங்கள், 32 தொகுதிகள்.. வெளியானது முதலமைச்சரின் முதல்கட்ட பிரச்சார அட்டவணை: - முழு விவரம் உள்ளே!
-
#TNElection2026Breaking : ம.தி.மு.க, IUML, MMK கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!