வைரல்

யார்கிட்ட வந்து.. பா.ஜ.க தொண்டரை பந்தாடிய கால்பந்து ரசிகர்கள்: கேரளாவில் நடந்தது என்ன?

கேரளாவில் போர்ச்சுகல் நாட்டின் கொடியைக் கிழித்தெறிந்த பா.ஜ. தொண்டரைக் கால்பந்து ரசிகர்கள் தாக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

யார்கிட்ட வந்து.. பா.ஜ.க தொண்டரை பந்தாடிய கால்பந்து ரசிகர்கள்: கேரளாவில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகத்தின் பாதி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று கோலாகலமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான கத்தாரில் தொடங்கியுள்ளார். ஆசியாவில் நடக்கும் இரண்டாவது கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும், மத்திய கிழக்குப் பகுதியில் நடக்கும் முதல் கால்பந்து உலகக்கோப்பை தொடராகவும் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலகின் அனைத்து மூலைகளிலும் கால்பந்து பரவியிருப்பதால் இங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமும் உலக அளவில் கவனிக்கப்படும். கால்பந்து உலகக்கோப்பைக்கான தகுதி சுற்றில் கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் பங்கேற்கின்றன. இதன் காரணமாக ஒலிம்பிக் தொடருக்குப் பிறகு உலகளவில் அதிகம் எதிர்நோக்கப்படும் தொடராகக் கால்பந்து உலகக்கோப்பை இருந்து வருகிறது.

இந்தியா கால்பந்து அரங்கில் உலகளவில் ஜொலிக்கவில்லை என்றாலும், இந்தியாவில் அதிகம் எதிர்நோக்கப்படும் தொடராக கால்பந்து உலகக்கோப்பை இருந்து வருகிறது. வடகிழக்கு மாநிலம், கோவா, மேற்கு வங்கம் போன்ற இடங்களில் கிரிக்கெட்டை விட அதிகம் வரவேற்பு பெரும் விளையாட்டாகக் கால்பந்து தொடர் இருந்து வருகிறது.

இந்த கால்பந்து உலகக்கோப்பைக்கான கொண்டாடும் விதமாகக் கேரள ரசிகர்கள் கேரள மாநிலம் முழுவதும் தங்களுக்குப் பிடித்த வீரர்கள், அந்தந்தநாட்டு கொடிகளைக் வீதி வீதியா கட்டி கொண்டாடி வருகின்றனர். கத்தாரில் போட்டி நடந்தாலும்,தங்கள் மாநிலத்திலேயே போட்டி நடைபெறுகிறது என்ற அளவிற்குப் பிரம்மாண்டமான ஏற்பாடுகளைக் கேரள ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் SDPI கட்சியின் கொடி என நினைத்து போர்ச்சுகல் நாட்டின் கொடியை கிழித்தெறிந்த வீடியோ இணையத்தில் சில நாட்களுக்கு முன்பு வைரலானது. இந்த சம்பவம் கண்ணூர் மாவட்டம் பானூர் வைத்தியர் பகுதியில் நடந்துள்ளது.

யார்கிட்ட வந்து.. பா.ஜ.க தொண்டரை பந்தாடிய கால்பந்து ரசிகர்கள்: கேரளாவில் நடந்தது என்ன?

இதையடுத்து போர்ச்சுகல் நாட்டின் கொடியைக் கிழித்தது தீபக் என்பதும் இவர் பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர் என்பது போலிஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போர்ச்சுகல் நாட்டின் கொடியைக் கிழித்த பா.ஜ.க தொண்டர்களை கால்பந்து ரசிகர்கள் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போர்ச்சுகல் நாட்டின் கொடியைக் கிழித்த பா.ஜ.க தொண்டர் தலையில் கட்டுடன் இருக்கும் புகைப்பட இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories