உலகம்
620 அடி ஆழ சுரங்கத்தில் சிக்கிய 2 தொழிலாளர்கள்.. 9 நாட்களுக்கு பின் மீட்பு.. பவுடரை உண்டு வாழ்ந்த சோகம்!
தென் கொரியாவின் போங்க்வா நகரில் துத்தநாக தனிமை சுரங்கம் ஒன்று அமைந்தது. இந்த சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இடிபாடுகளில் சிக்கி ஏராளமான தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து மீட்புப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கிய சில தொழிலாளர்களை மீட்டனர். எனினும் சுரங்கத்தின் கீழ் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவந்தது.
இதில் இரண்டு தொழிலாளர்கள் சுமார் 620 அடி ஆழத்தில் செங்குத்தான பாறைகளின் நடுவே 9 நாட்கள் சிக்கியிருந்துள்ளனர். தங்களிடம் இருந்த காபி பவுடரை உட்கொண்டும் பாறைகளில் வடிந்த நீரை குடித்தும் தங்கள் உயிரை காப்பாற்றி வந்துள்ளனர்.
9 நாட்களுக்கு பிறகு இந்த தொழிலாளர்கள் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்புப்படையினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தென்கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!