உலகம்
"ஆபிசில் இருந்தா வீட்டுக்கு போங்க, வீட்டில் இருந்தா அப்படியே இருங்க"-Twitter ஊழியர்களுக்கு பறந்த Mail !
உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்தது. இதை உறுதி செய்யும் விதமாக ட்விட்ரில் 9.1 சதவீத பங்குகளையும் எலான் மஸ்க் வாங்கினார். இதையடுத்து ட்விட்டரில் போலி கணக்குகள் இருப்பதாகக் கூறி ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் ட்விட்டர் நிறுவனத்திற்கும், எலான் மஸ்க் இடையே பிரச்சனை எழுந்தது.
இந்த பிரச்சனை குறித்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. இதனால் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாக்குவரா? இல்லையா? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் இதற்கு முற்றுபுள்ளிவைத்துள்ளார் எலான் மஸ்க. ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கருத்தும் பரவலாக இருந்தது அதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது ஒரு மெயில் ட்விட்டர் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதில், "நீங்கள் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தாலோ அல்லது அலுவலகத்திற்கு ஏற்கெனவே வந்துவிட்டாலோ வீட்டுக்குத் திரும்பலாம். வெள்ளிக்கிழமை மாலைக்குள் நீங்கள் வேலையில் இருக்கிறீர்களா இல்லையா என்பது பற்றி உங்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.ங்கள் வேலையில் நீடிக்கிறீர்கள் என்றால் அலுவலக இமெயில் முகவரிக்கு மெயில் அனுப்பப்படும். நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் அதன் விவரம் உங்களது தனிப்பட்ட இமெயில் முகவரிக்கு அனுப்பப்படும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ட்விட்டர் நிறுவனத்தை ஆரோக்கியமான பாதையை நோக்கி இட்டுச் செல்ல உலகளவில் பணியாட்களைக் குறைக்கும் கடினமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இது ஊழியர்கள், ட்விட்டர் நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி எடுக்கப்படுகிறது" என்றும் அந்த மெயிலில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ட்விட்டர் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!