விளையாட்டு

'Fake Fielding' செய்தாரா விராட் கோலி ? வங்கதேசத்தை ஏமாற்றி வென்றதா இந்திய அணி ? ICC விதி சொல்வது என்ன ?

காலத்தில் விராட் கோலி ஃபேக் ஃபீல்டிங் செய்தார் என்றும் அதற்கு ஐந்து ரன்கள் பெனால்டி கொடுத்திருக்க வேண்டும் என்றும் வங்கதேச வீரர்கள் கூறி வருகின்றனர்.

'Fake Fielding' செய்தாரா விராட் கோலி ? வங்கதேசத்தை ஏமாற்றி வென்றதா இந்திய அணி ? ICC விதி சொல்வது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆஸ்திரேலியாவில் 8-வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் மோதியது.

இதில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன் படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 159 ரன்களை எடுத்து 160 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் இந்திய அணி சார்பில் களமிறங்கிய முன்னணி பேட்ஸ்மேன்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் மிகவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

'Fake Fielding' செய்தாரா விராட் கோலி ? வங்கதேசத்தை ஏமாற்றி வென்றதா இந்திய அணி ? ICC விதி சொல்வது என்ன ?

இந்த கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த கோலி இறுதிவரை களத்தில் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். அந்த போட்டியில் அவர் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்திருந்தார்.அடுத்ததாக நெதர்லாந்து அணியுடனான போட்டியிலும் சிறப்பாக ஆடிய கோலி அந்த போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இந்த போட்டியிலும் இந்திய அபார வெற்றி பெற்றது. பின்னர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சோபிக்க தவறினார்.

பின்னர் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் சிறப்பாக ஆடிய விராட் கோலி அந்த போட்டியில் 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் வங்கதேசம் பேட்டிங் ஆடியபோது ஒரு சர்ச்சை எழுந்தது. 7வது ஓவரில் அக்சர் பட்டேல் வீசிய பந்தை லிட்டன் தாஸ் ஆஃப்-சைட்டில் அடித்தார். பந்தை எடுத்த அர்ஷ்தீப் சிங் த்ரோவை அனுப்பியபோது, ​​பாயிண்டில் நின்ற கோலி பந்து அவரைத் தாண்டிச் செல்லும்போது ஸ்டம்பிக்கு பிடித்து வீசுவது போல பாவனை செய்தார். அந்த நேரத்தில், கள நடுவர்களான மரைஸ் எராஸ்மஸ் மற்றும் கிறிஸ் பிரவுன் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை. வங்கதேச வீரர்களும் அதனை கவனிக்கவில்லை.

'Fake Fielding' செய்தாரா விராட் கோலி ? வங்கதேசத்தை ஏமாற்றி வென்றதா இந்திய அணி ? ICC விதி சொல்வது என்ன ?

ஆனால் போட்டி முடிந்த பின்னர் வங்க தேச விக்கெட் கீப்பர் வீரர் நூருல் ஹசன், “களத்தில் நடந்த ஒரு பெரிய சம்பவத்தை நடுவர் எப்படி புறக்கணித்தார் என்று தெரியவில்லை. அது ஒரு ஃபேக் ஃபீல்டிங் . அதற்கு ஐந்து ரன்கள் பெனால்டி கொடுத்திருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அது கூட நடக்கவில்லை" என்று கூறினார். அதோடு வங்கதேச ரசிகர்களும் இது தொடர்பாக விமர்சித்து வந்தனர்.

ஐசிசி-யின் விதி 41.5.1-ன் படி இந்திய வீரர் கோலி இப்படி செய்தது தவறானது எனவும், இந்த விதியின்கீழ் பேட்ஸ்மேனை ஏமாற்றுவதால் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்படவேண்டும் என்றும் வங்கதேச ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆனால், நடந்த இந்த சம்பவத்தில் கோலி செய்ததை களத்தில் பேட்டிங் ஆடிய வங்கதேச வீரர்கள் கவனித்ததாகவே இல்லை, மேலும் எந்த விதத்திலும் இது பேட்டிங்க்கு இடையூராக இல்லை என்பதால் அந்த விதியின் கீழ் விராட் கோலி செய்தது வராது என இந்திய ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் பதிலளித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories