உலகம்

வீடியோ காலில் இனி இத்தனை பேர் இணையலாமா ? Whatsapp நிறுவனம் கொடுத்த அட்டகாசமான Update !

நவீன உலகில் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தகவல்கள் பரிமாற்று விஷயங்களுக்கு புதிதாக ஆப் கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதலில் முகநூல், வாட்சப் பயன்படுத்துவது போல், தற்போது இன்ஸ்டாகிராமும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் பயன்படுத்தும் ஒரு செயலியாக முன்னிலையில் இருப்பது வாட்ஸ் அப். இந்த செயலியானது தற்போது முகநூல் நிறுவனமான 'Meta' வசம் சென்ற பிறகு அடிக்கடி பல்வேறு அப்டேட்களை அள்ளிக்கொடுக்கிறது.

அந்த வகையில், சமீபத்தில் வாட்ஸ் அப் Privacy-ல் Last Seen, Status, About போன்றவற்றை மட்டுமே இதுவரையில் கட்டுப்படுத்தி வந்த நிலையில், தற்போது DP என்று சொல்லப்படுகிற வாட்ஸ் அப் Display Picture (Profile Picture)-ஐ விருப்பட்டவர்களுக்கு மட்டும் தெரியும்படி வைக்கலாம் என புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் வாட்சப்பில் தொடர்ந்து பல புதிய அப்டேட்கள் மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் வாட்சப் வீடியோ கால் மற்றும் குரூப் குறித்த புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் தற்போது வாட்ஸப் வீடியோ காலில் 32 பேர் வரை இணைய முடியும். இதன் மூலம் நீண்ட நாள் நண்பர்கள் அனைவரும் வீடியோ கால் வாயிலாக மொத்தமாக சந்திக்க முடியும்.

அதோடு, வாட்சப் குரூப்பில் முதலில் 256 உறுப்பினர்கள் இருந்த நிலையில், அது 512 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய அப்டேட்டில் 1024 உறுப்பினர்கள் வரை இணைய முடியும். அது மட்டுமின்றி "கம்யூனிட்டிஸ்" என்ற புதிய வசதியையும் மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது வாட்ஸ்அப்பில் குரூப் உரையாடல்களை ஒழுங்கமைக்க, பயனர்கள் பல குரூப்களை "கம்யூனிட்டிஸ்" கீழ் இணைக்க முடியும். இவை அனைத்தும் "என்ட் டு என்ட் என்க்ரிப்ஷன்" மூலம் பாதுகாக்கப்படும் எனவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி ட்விட்டர் வலைதளத்தில் விரைவில் கொண்டு வரப்போவதாக அறிவித்த Edit வசதி, தற்போது வாட்சப்பிலும் அறிமுகமாகவுள்ளது. இதன்மூலம் பயனர்கள் தாங்கள் அனுப்பும், Message-களை வெறும் 15 நிமிடங்களுக்குள் Edit செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த வசதி முதலில் ஐ-போன் பயனர்களுக்கு வழங்கப்படும் என்றும், எடிட் செய்த பிறகு, அது எடிட்டட் என்றும் குறிப்பிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Also Read: “ஆஹா.. இது நல்ல விசயமா இருக்கே..” -ஒன்றா, இரண்டா.. ப்பா.. புதிய Updateகளை அள்ளி அள்ளி கொடுக்கும் Whatsapp