உலகம்
இதுக்கு Twitter CEO-வை பணிநீக்கம் செய்திருக்கவே வேண்டாம்.. எலான் மஸ்க்கை கலாய்க்கும் இணையவாசிகள் !
உலகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என சாமானிய மக்கள் வரை பலரும் ட்விட்டர் சமூகவலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கு ட்விட்டரை ஒரு பிரச்சார கருவியாகப் பலரும் பயன்படுத்தினர்.
சில மாதங்களாகவே உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்தது. இதை உறுதி செய்யும் விதமாக ட்விட்ரில் 9.1 சதவீத பங்குகளையும் எலான் மஸ்க் வாங்கினார். இதையடுத்து ட்விட்டரில் போலி கணக்குகள் இருப்பதாகக் கூறி ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் ட்விட்டர் நிறுவனத்திற்கும், எலான் மஸ்க் இடையே பிரச்சனை எழுந்தது.
இந்த பிரச்சனை குறித்து ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. இதனால் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாக்குவரா? இல்லையா? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் இதற்கு முற்றுபுள்ளிவைத்துள்ளார் எலான் மஸ்க. ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.
மேலும் ட்விட்டர் நிறுவனத்தை உரிமையாளராக எலான் மஸ்க் ஆகிவிட்டால் அதில் பணியாற்றும் ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கருத்தும் பரவலாக இருந்தது அதை உறுதிப்படுத்தும் வகையில் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தில் CEO பராக் அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டதன் மூலம் அவருக்கு சுமார் 42 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.346 கோடி) கிடைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மும்பை ஐஐடி மற்றும் அமெரிக்காவில் உள்ள ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற பராக் அகர்வால் ட்விட்டர் நிறுவனத்தில் சேர்ந்து அந்த நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். அதன் உச்சமாக கடந்த ஆண்டு அதன் CEO-வாக பொறுப்பேற்றார்.
அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தில் 12 மாதத்திற்குள் பராக் அகர்வால் பணியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு ட்விட்டர் நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட அளவு தொகை அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக அமெரிக்க நிறுவனங்கள் கூறியுள்ளன. மேலும், ஈக்விட்டி பங்குகள் மற்றும் அடிப்படை ஊதியத்தின் ஆண்டு வருவாய் ஆகிய தொகைகளையும் சேர்த்து அவருக்கு 42 மில்லியன் டாலர் வரை கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
Also Read
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !