உலகம்

களைகட்டிய HOLLOWEEN கொண்டாட்டம்.. திடீர் நெரிசலில் மூச்சி திணறி சரிந்த இளம்பெண்கள்.. 150 பேர் பலி !

கொரோனா காரணமாக பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடாமல் இருக்க கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளின் அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்தன. இதன் காரணமாக முக்கிய பண்டிகைகள் பொதுஇடங்களில் இல்லாமல் வீட்டிலேயே கொண்டாடப்பட்டன.

தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ளன. இதன் 3 ஆண்டுகாலம் கொண்டாடாமல் இருந்த பண்டிகைகளை உலகளவில் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

மேற்கத்திய நாடுகளில் பிரபலமாகி இருந்த ஹாலோவீன் தற்போது சில ஆண்டுகளாக தென்கொரியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. கொரோனா காரணமாக சில ஆண்டுகள் ஹாலோவீன் அங்கு கொண்டாடப்படாத நிலையில், தற்போது அங்கு விமர்சையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில், தென் கொரியாவின் தலைநகரான சியோலிலுள்ள ஒரு முக்கியமான சந்தையில் ஹாலோவீன் விழாவை கொண்டாட பொதுமக்கள் பெரும்திரளாக திரண்டனர். போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாத நிலையில், திடீரென அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலில் சிக்கி பலர் மயங்கிவிழுந்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். சுமார் 300 பேர் இந்த நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட நிலையில் அதில் பலர் மாரடைப்பு காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சுமார் 300 வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையிலும் கூட உயிர் பலியை தவிர்க்கமுடியவில்லை. செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தகவலின் படி இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 149 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 160க்கும் மேற்பட்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: எருமைக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞரை அடித்து உதைத்த பொதுமக்கள்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி !