இந்தியா

எருமைக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞரை அடித்து உதைத்த பொதுமக்கள்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி !

இளைஞர் ஒருவர் எருமைக் கன்றுக்குட்டியை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எருமைக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞரை அடித்து உதைத்த பொதுமக்கள்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பாலியல் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது. தினமும் செய்திகளில் அதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றது.

அதேபோல சமீபநாட்களாக விலங்குகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதலும் அடிக்கடி நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ளது. இளைஞர் ஒருவர் எருமைக் கன்றுக்குட்டியை பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எருமைக்கு பாலியல் வன்கொடுமை.. இளைஞரை அடித்து உதைத்த பொதுமக்கள்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி !

மகாராஷ்டிரா மாநிலம், புனே, டெக்கான் பகுதியில் 38 வயதான நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் வேலை செய்துவருகிறார். அவர் அந்த பகுதியில் சுற்றித்திரிந்த எருமைக் கன்றுக்குட்டியை பலாத்காரம் செய்துள்ளார். இதனை அந்த பகுதியில் இருந்த ஒருவர் பார்த்து அங்கு இருப்பவர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.

அதன்படி அங்கு திரண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து சரமாரியாக அடித்து போலிஸில் ஒப்படைத்துள்ளனர். அவர்மீது இயற்கைக்கு மாறான உறவு, மிருகவதை தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories