உலகம்

மெசேஜ்க்கு ரிப்ளை செய்யாமல் என்ன வேலை? - ட்ரோன் அனுப்பி ஜன்னல் வழியே கண்காணித்த தோழி !

மெசேஜ்க்கு ரிப்ளை செய்யாத தோழியை ட்ரோன் அனுப்பி ஜன்னல் வழியே கண்காணித்த பெண்ணின் செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மெசேஜ்க்கு ரிப்ளை செய்யாமல் என்ன வேலை? - ட்ரோன் அனுப்பி ஜன்னல் வழியே கண்காணித்த தோழி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சீனாவில் வான் என்ற பெண்ணும் மற்றொரு பெண்ணும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்துள்ளனர். அவர்கள் வீடுகளும் கொஞ்சம் தொலைவில்தான் அமைந்துள்ளது. இந்த நிலையில் வான் என்ற பெண்ணுக்கு இதயப் பிரச்சனையால் உடல்நல பாதிப்பு இருந்துள்ளது.

இதன் காரணமாக வானின் தோழி அவரை மருத்துவ பரிசோதனை செய்யுமாறு கூறியுள்ளார். தோழி கூறியபடி பரிசோதனை செய்த பெண் அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு சென்று நன்றாக உறங்கியுள்ளார். வீட்டுக்கு சென்றவான் மெசேஜ் ஏதும் அனுப்பாத நிலையில், அவரின் தோழி இதுகுறித்து we chat செயலியில் வானுக்கு மெசேஜ் செய்துள்ளார்.

மெசேஜ்க்கு ரிப்ளை செய்யாமல் என்ன வேலை? - ட்ரோன் அனுப்பி ஜன்னல் வழியே கண்காணித்த தோழி !

பல முறை வானுக்கு மெசேஜ் செய்தும் அவர் பதில் ஏதும் அனுப்பாததால் கவலை அடைந்த அவரின் தோழி வித்தியாசமான முறையில் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தனது கணவர் வைத்திருந்த ட்ரோனை எடுத்த அந்த பெண் வான் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை அறிய வானின் வீடு நோக்கி அந்த ட்ரோனை அனுப்பியுள்ளார்.

வானின் வீட்டு ஜன்னல் அருகே ட்ரோன் இருந்த நிலையில், சத்தம் கேட்டு ஜன்னலை திறந்து வான் ட்ரோனை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வான் இணையத்தில் பகிர அது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. பலர் இவர்கள் நட்பு குறித்து சிலாகிக்க சிலர் ட்ரோன் செல்லும் தூரத்தில் வீடு இருந்தால் நேரில் சென்று பார்த்து இருக்கலாமே என்றும் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories