உலகம்

ஏலத்துக்கு வரும் 41 ஆண்டுகள் பழமையான கேக்.. இளவரசர் சார்லஸ்-டயானா திருமண கேக்கை பாதுகாத்த குடும்பம் !

உலக அளவில் பிரபலமான அரச குடும்பம் என்றால் அது பிரிட்டன் அரச குடும்பம்தான். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை காலனியாதிக்கம் செய்துவந்த அந்த பேரரசு சூரியன் மறையாத நாடு என்னும் பெயரை பெற்றது.

20ம் நூற்றாண்டின் இறுதியில் அதன் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு நாடுகள் தனி நாடுகளாக பிரிந்தாலும் அதில் பல்வேறு நாடுகளுக்கு மன்னராக பிரிட்டன் மன்னரே இருந்து வருகிறார். பிரிட்டன் ராணியாக இருந்த எலிசபெத் சில நாட்களுக்கு முன்னர் மரணடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அரசு குடும்பத்தைச் சேர்ந்த சார்லஸ் கடந்த 1981-ம் ஆண்டு இளவரசி டயானாவை மணந்துகொண்டார். அப்போது அவர்களது திருமணத்தில் கேக் ஒன்று வெட்டப்பட்டது. அந்த கேக்கில் ஒரு துண்டினை திருமணத்துக்கு வந்த விருந்தினர்களின் ஒருவரான நைஜெல் ரிக்கெட்ஸ் என்பவர் தற்போது வரை பாதுகாப்பாக வைத்துள்ளார்.

இந்த நிலையில் 41 ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அந்த கேக் தற்போது ஏலத்துக்கு வந்துள்ளது. இந்த கேக்கை இங்கிலாந்தில் உள்ள டோர் அண்ட் ரீஸ் நிறுவனம் ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளது. ஈழத்துக்காக ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ. 27,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அந்த கேக் தற்போது ஒரு பெட்டியில் பாதுகாப்பாக இருக்கும் நிலையில், அதே பெட்டியில் இளவரசர்(தற்போது மன்னர்) சார்லஸ் கையால் எழுதப்பட்ட நன்றிக் குறிப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராணி எலிசபெத் பயன்படுத்திய டீ பேக் ஒன்று ஏலத்தில் சுமார் ரூ.9.5 லட்சத்திற்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: டெல்லியில் மற்றொரு நிர்பயா கொடூரம்.. பெண்ணை வன்கொடுமை செய்து நடுத்தெருவில் வீசிய சகோதரரின் நண்பர்கள் !