உலகம்
"உங்கள் மகன் பிழைக்க மாட்டான்.." - மருத்துவர்கள் கூறியதை பொய்யாக்கிய இரண்டு தலை கொண்ட அரிய சிறுவன்..
அமெரிக்கா, மிசோரி பகுதியை சேர்ந்தவர் ட்ரெஸ் ஜான்சன். Craniofacial Duplication என்று அறியப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட இவர், இரண்டு தலைகளோடு பிறந்துள்ளார். இந்த அரிய வகை நோய் உலகில் 36 பேரை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த நோய் இருப்பவர்கள் நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியாது என்று அறிவியல் அறிஞர்கள் பலரும் கூறுகின்றனர். இந்த நிலையில், ட்ரெஸ் என்ற சிறுவன், தற்போது தனது 18-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இவரை மருத்துவமனையில் பரிசோதித்தபோது மருத்துவர்கள், 'இந்த சிறுவனால் நீண்ட காலம் வாழமுடியாது' என்று கூறி வந்தனர். ஒவ்வொரு முறையும் மருத்துவர்கள் கூறி வந்த நிலையில், அவரது தாயின் அரவணைப்பிலும், பாசத்தாலும் நாளுக்கு நாள் இவரது ஆயுட்காலம் கூடிக்கொண்டே போகிறது.
இரண்டு தலை மட்டுமில்லை, இரண்டு முகங்கள், தனித்துவமான நாசிகள் உள்ளிட்டவையோடு பிறந்த இந்த குழந்தையை அவரது தாய் பிராண்டி முதன் முதலில் ஒரு பெட்டியில் தான் பார்த்ததாக வேதனையுடன் கூறினார். மேலும் இந்த சிறுவனுக்கு அடிக்கடி வலிப்பு நோயும் ஏற்படும். இருப்பினும் அவரது தாய் இந்த சிறுவனை பாரமாக கருதாமல் கவனத்துடன் பார்த்து வருகிறார்.
நீண்ட நாட்கள் வாழ இயலாது என்று ஒவ்வொரு முறையும் கூறி வந்த மருத்துவர்களின் வாக்கை பொய்யக்கி, தாயின் உறுதுணையோடு தனது 18-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ட்ரெஸுக்கு சமூக வலைதளங்கள் மூலம் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!