உலகம்

இனி விண்கற்களை கண்டு பயமில்லை.. நாசாவின் சாதனையை கண்டு வியக்கும் உலகம்.. பாராட்டும் விஞ்ஞானிகள் !

நாம் மேலே பார்க்கும் வானத்தில் ஏராளமான விண்கற்கள் சுற்றிவருகின்றனர். அதில் சில தொடர்ந்து பூமியில் மோதியும் வருகிறது. ஆனால் அவற்றில் இருந்து நமது வளிமண்டலம் நம்மை காத்து வருகிறது. ஆனால் அளவில் பெரிய விண்கற்கள் பூமியில் மோதினால் அது பூமிக்கு பெரும் ஆபத்தாக மாறும்.

இதனைத் தடுக்க பல்வேறு நாடுகளின் விண்வெளி அமைப்புகளும் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவும் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பூமியை நோக்கி மோதக் கூடிய வகையில் வரும் விண்கற்களின் மீது விண்கலத்தை அதிக வேகத்தில் மோதச் செய்து, அவற்றின் பாதையை மாற்றுவதற்கான சோதனையில் நாசா தற்போது வெற்றி பெற்றுள்ளது.

விண்வெளியில் 70 லட்சம் மைல்களுக்கு சுற்றிக் கொண்டிருக்கும் 760 மீட்டர் சுற்றளவு கொண்ட 'டிடிமோஸ்' என்ற பிரமாண்ட விண்கல்லை திசை மாற்ற விண்கல் திசை திருப்பும் சோதனை' (டார்ட்) என்ற பெயரிலான விண்கலத்தை, 9 மாதங்களுக்கு முன் நாசா அமைப்பு ஏவியது.

இந்த விண்கல்லின் சுற்று வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் மார்போஸ் என்ற சிறிய கோளை, இது முதலில் குறிவைத்து 22 கிலோ மீட்டர் வேகத்தில் அதன்மீது மோதியது . இதில், டிடிமோஸ் விண்கல்லின் சுற்றுப் பாதையில் இருந்து விலகி, புதிய சுற்றுப்பாதைக்கு சென்றுள்ளது. இதன் மூலம் நாசாவின் முதல் கட்ட சோதனை வெற்றி அடைந்துள்ளது. இதன் காரணமாக இனி பூமியில் மோத வரும் பெரிய விண்கற்களை பார்த்து கூட அஞ்ச ஏதும் இல்லை அறிவியலார்கள் கூறி வருகின்றனர்.

Also Read: நள்ளிரவில் கண்விழித்து அதிர்ந்த பெண்கள்.. தங்கும் விடுதியில் தூங்கிக்கொண்டிருந்தபோது நேர்ந்த அதிர்ச்சி !