உலகம்

சிங்கத்துடனே Prank - சிறிய தவறால் கொதித்தெழுந்த சிங்கங்கள்.. உயிரை காப்பாற்ற அலறியடித்து ஓடிய YOUTUBER!

ஜப்பானை சேர்ந்த ஜைரோ (28) என்பவர் யூடியூப் சேனலை தொடங்கி அதில் Prank விடீயோக்களை பதிவிட்டு வந்துள்ளார். இவரின் யூடியூப் சேனலுக்கு ஏராளமான FOLLOWERS இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் புதுமையான முறையில் Prank வீடியோக்களை இவர் பதிவு செய்து வந்துள்ளார்.

மனிதர்களை வைத்து prank செய்தவர் பின்னர் விலங்குகளை வைத்தும் Prank செய்ய முடிவெடுத்துள்ளார். அதன்படி காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கத்தை வைத்து Prank செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக ஜப்பானில் உள்ள மிருகக்காட்சி சாலைகளில் ஜைரோவும், அவரது நண்பர்களும் அனுமதி கேட்டுள்ளனர்.

ஆனால் அங்கு அனுமதி கிடைக்காத நிலையில், ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியா நாட்டில் இருக்கும் மிருகக்காட்சி சாலையில் Prank செய்ய இவர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. அந்த மிருகக்காட்சி சாலையில் சுமார் 50 சிங்கங்கள் இருந்து வருகிறது. அனுமதி கிடைத்ததும் இவர் தனது குழுவினரோடு தான்சானியா சென்றுள்ளார்.

அங்கு சென்றதும் தான் கொண்டுவந்திருந்த சிங்கம் போல இருக்கும் உடையை அணிந்துகொண்டு சிங்கம் இருக்கும் பகுதிக்குள் 4 கால்களுடன் சிங்கம் போல நடந்து சென்றுள்ளார். முதலில் இவரை பார்த்தும்சிங்கங்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் இவர் சிங்கங்களுக்கு மிகஅருகில் சென்றுள்ளார். அப்போதும் சிங்கங்கள் இவரை சீண்டவில்லை.

இதன் தொடர்ச்சியாக, மெதுவாக எழுந்த அவர் இரண்டு கால்களில் நடக்க தொடங்கியுள்ளார். அதுவரை பார்த்துக்கொண்டிருந்த 8-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் உடனை அவரை தாக்கத் தொடங்கின. இதைப்பார்த்து பயந்து போன அவர் அங்கும் இங்கும் அலைந்து உயிர் பிழைக்க ஓடியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அங்கிருந்த பாதுகாவலர்கள் விரைந்து சென்று அவரை மீட்டு அந்த பகுதியில் இருந்து வெளியேற்றினர். சிங்கங்களின் தாக்குதலில் அந்த யூடியூபரின் கால், கை, முதுகு என ஆகிய இடங்களில் கடும் காயம் ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Also Read: "BOYFRIENDS வாடகைக்கு விடப்படுவர்" - பெங்களூரை கலக்கும் புதிய செயலி.. பின்னணி என்ன ?