உலகம்

நைஜீரியாவில் வெளிநாட்டு மாடல்களுக்கு தடை.. வெள்ளை நிறுத்துக்கு பதில் கறுப்பினத்தவரை பயன்படுத்த உத்தரவு!

உலகம் முழுவதும் சிகப்பு,வெள்ளை நிறத்தை கொண்டவரே அழகானவர் என்றும் கருப்பு நிறமுடையவர் அழகானவர் அல்ல என்றும் ஒரு பொதுக்கருத்து நிலவுகிறது. இதற்கு முக்கிய காரணமாக சினிமாவும், விளம்பரங்களும் இருந்து வருகிறது.

இந்த விளம்பரங்களின் மோகம் கறுப்பினத்தவர்கள் அதிகம் வாழும் ஆப்பிரிக்காலும் நிலவி வருகிறது. அங்குள்ள பல நிறுவனங்கள் தங்கள் பொருள்களை விற்பனை செய்யும் மாடலாக வெள்ளை நிற தோல் கொண்டவர்களை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில், வெள்ளை நிறம் கொண்ட வெளிநாட்டு மாடல் கலைஞர்களை பயன்படுத்துவதற்கு நைஜீரிய அரசு தடை விதித்துள்ளது. விளம்பரங்களில் உள்ளூர் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், இந்த துரையின் வேலை வாய்ப்புகள் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைப்பதை தடுக்கும் விதமாக இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலகில் வேறு எந்த நாடும் இதுவரை இயற்றாத இத்தகைய புதிய சட்டத்தை இயற்றியுள்ள நைஜீரிய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டத்தின்படி, பின்னணி குரல் கலைஞர்களுக்கும், நைஜீரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் அக்டோபர் 1ம் தேதிக்கு நடைமுறைக்கு வரும் நிலையில், பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளும் இதேபோன்ற சட்டத்தை அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல பல்வேறு நாடுகளின் கலைஞர்களும் இது போன்ற சட்டத்தை தங்கள் நாடுகளும் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: எச்சரிக்கையை மீறி சென்ற கார்.. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞர்கள்.. போராடி மீட்ட ஊர்மக்கள் !