உலகம்
ஒரே ஆண்டில் 70 கிலோ எடை குறைத்த இளைஞர்.. காதலியால் நடந்த அதிரடி மாற்றம்.. என்ன செய்தார் காதலி ?
எப்போதுமே வலி தரும் உத்வேகம் அளப்பரியது. சிலர் தந்த அவமானத்தில்தான் பலர் வாழ்க்கையின் உச்சம் தொட்டுள்ளனர். அப்படிதான் ஒரு சம்பவம்தான் இளைஞர் ஒருவருக்கு நடந்துள்ளது.
புவி என்ற இளைஞர் கடந்த ஆண்டு சுமார் 139 கிலோ எடையோடு இருந்துள்ளார். அவர் தனக்கு செட் ஆகும் ஒரே ஒரு ஆடையை மட்டுமே தொடர்ந்து அணிந்து வந்துள்ளார். அவரின் எடை காரணமாகவும், அவர் ஒரே உடை அணிந்ததன் காரணமாகவும் பலர் அவரை கிண்டல் செய்து வந்துள்ளனர்.
இது தவிர அவரின் காதலி எடையை காரணம் காட்டி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் மிகவும் மாணவருத்ததில் இருந்த புவி,அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். தன்னை கிண்டல் செய்தவர்களுக்கும் தான் வேண்டாம் என பிரிந்து சென்ற காதலிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது எடையை குறைக்க முடிவெடுத்துள்ளார்.
அதன் பின்னர் ஜிம் ஒன்றில் சேர்ந்த அவர் அங்கு தீவிர உடல் பயிற்சி செய்து தனது எடையை குறைத்து வந்துள்ளார். கடந்த ஓராண்டாக கடுமையான உடற்பயிற்சியையும் உணவு கட்டுப்பாட்டையும் மேற்கொண்ட புவி, தனது எடையை சுமார் 70 கிலோ வரை குறைத்துள்ளார்.
அதாவது கடந்த ஆண்டில் தான் இருந்ததில் பாதி எடையை குறைத்து தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றி சாதனை படைத்துள்ளார். அந்த புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில், அது தற்போது வைரலாகியுள்ளது.
அவர் வெளியிட்ட புகைப்படங்களையும், வீடியோகளையும் பார்த்த இணையவாசிகள் அவரின் விடாமுயற்சியை பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!