உலகம்
இதுக்கெல்லாமா DNA டெஸ்ட் பண்ணுவாங்க :Handbag மீது சிறுநீர் கழித்த காதலன் மீது போலிஸ் புகார் கொடுத்த காதலி
தென்கொரியாவிலுள்ள சியோல் என்ற நகரில் 31 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி டேட்டிங் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம், இளைஞர் தனது காதலிக்கு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கடுமையாக முற்றிப்போகவே, தனது காதலியின் மீதான கோபத்தை அவரது விலையுர்ந்த லூயிஸ் உய்ட்டன் (louis vuitton) என்ற Handbag-ல் சிறுநீர் கழித்து வெளிபடுத்தியுள்ளார். இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.50 லட்சம் ஆகும்.
இதனை கண்ட அந்த இளம்பெண் அவரை கண்டபடி திட்டியுள்ளார். இருப்பினும் கோபம் தீராத அந்த பெண் சியோல் சென்ட்ரல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில் தனது முன்னாள் காதலன் தனது விலையுர்ந்த Handbag-ல் சிறுநீர் கழித்ததால் தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், காதலன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த இளைஞர் Handbag-ல் சிறுநீர் கழிக்கவில்லை என்றும், பெண்ணை மிரட்டுவதாக அப்படி நடித்தார் என்றும் வாதிட்டார். இருப்பினும் அந்த Handbag-ஐ தேசிய தடய அறிவியல் பிரிவினர் சோதனை செய்தனர். மேலும் அந்த இளைஞரின் DNA சாம்பிள் சோதனை செய்ததில் காதலன் தான் அந்த பெண்ணின் Handbag-ல் சிறுநீர் கழித்தது உறுதியானது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அந்த இளைஞரை குற்றவாளியாக கருதியதோடு 1,150 அமெரிக்க டாலர் (இந்திய ரூபாயில் 91,634) நஷ்ட ஈடாக வழங்க அதிரடியாக உத்தரவிட்டார்.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?