உலகம்
சிறுவனுக்கு 'பளார்' விட்ட பாகிஸ்தான் பெண் செய்தியாளர்.. வைரலாகும் வீடியோ.. இதுக்ககெல்லாமா அடிப்பாங்க!
பொதுவாக ஒரு பண்டிகையை கொண்டாடுகையில், பொது வெளியில் நின்று அந்த பண்டிகை எப்படி கொண்டாடப்படுகிறது என்று பொதுமக்களிடம் கருத்து கேட்டு செய்தி போடுவது வழக்கம்.
அந்த வகையில் இஸ்லாமிய பண்டிகையான பக்ரீத் கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்று பாகிஸ்தான் நாட்டிலுள்ள லாகூரில், மைரா ஹாஸ்மி பெண் செய்தியாளர் ஒருவர் பொது வெளியில் நின்று செய்தி வழங்கி கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்த சிறுவன் ஒருவனின் கன்னத்தில் அந்த பெண் செய்தியாளர் 'பளார்' என்று அறைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், எதற்காக அந்த சிறுவனை அடித்தார் என்று பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து அந்த பெண் செய்தியாளர், தான் எதற்காக அந்த சிறுவனை அடித்தேன் என்று விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் வேலை செய்யும்போது தனக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அந்த சிறுவன் நடந்துகொண்டதாகவும், அருகிலிருந்த ஒரு குடும்பத்தை சிறுவன் தொந்தரவு செய்ததாகவும், முதலில் அன்பாக தெரிவித்ததாகவும், ஆனால் மீண்டும் மீண்டும் இடையூறு செய்ததால் கோபப்பட்டு அடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
என்னதான் இருந்தாலும் அந்த சிறுவனை பொது வெளியில் வைத்து அடித்தது கண்டித்தக்கது என்று பலரும் இந்த பெண் செய்தியாளருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது அவர் அறைந்த வீடியோவுடன், அவர் அளித்துள்ள விளக்கமும் வைரலாகி வருகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!