உலகம்
அந்தரங்க உறுப்பில் சிக்கிய மர்மப்பொருள்.. இளைஞரின் செயலால் அதிர்ச்சியில் மூழ்கிய மருத்துவர்கள்!
பாகிஸ்தானிலுள்ள கராச்சி நகரில் வசித்து வரும் ஒருவர் நீண்ட காலமாக சிறுநீர் கழிப்பதில் பிரச்சனையை சந்தித்து வந்துள்ளார். இதனால் தன் பிரச்சனை தொடர்பாக மருத்துவமனையை அணுகியபோது அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது.
இதில் அவரது அந்தரங்க உறுப்பில் ஏதோ ஒரு மர்ம பொருள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இந்த பொருள் குறித்து மருத்துவர்கள் அவரிடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக கூறியுள்ள அவர், சிறுநீர் கழிப்பதில் தனக்கு பிரச்சனை இருந்ததால் அதை சரி செய்ய 18 சென்டிமீட்டர் நீளமுள்ள வயரை அந்தரங்க உறுப்பில் நுழைத்ததாக கூறியுள்ளார். மேலும் அது உள்ளேயே சிக்கிக் கொண்டதால் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவமனைக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதன் பின்னர் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவர் அந்தரங்க உறுப்பில் சிக்கியிருந்த 18 சென்டிமீட்டர் நீளமுள்ள வயரை நீக்கினர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மருத்துவர்கள் இந்த சம்பவத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால் அந்த நபரின் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை.
இது தொடர்பாக பேசியுள்ள மருத்துவர்கள் அந்த நபர் இன்னும் கொஞ்சம் நாள் தாமதமாக வந்திருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும், யாரும் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!