உலகம்

திக்திக் நிமிடங்கள்.. நடுவானில் தலைகீழாக நின்ற ரோலர்கோஸ்டர்: அந்தரத்தில் தொங்கிய பயணிகள் - பின்னணி என்ன?!

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள கரோவிண்ட்ஸ் பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர்கோஸ்டர் சவாரி, ரைடர்களுக்கு பயங்கரமான திகிலாக மாறியது. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக ரோலர்கோஸ்டர் திடீரென நின்றுபோனதால், மக்கள் சுமார் 45 நிமிடங்களுக்கு தலைகீழாக தொங்கிய நிலையில் பரிதவித்தனர். ரோலர்கோஸ்டரில் இருந்த சிறு குழந்தைகளும் பயத்தில் உதவிக்காக அலறினர்.

பொழுது போக்கு என்றாலே இப்பொழுதெல்லாம் திரில்லிங்கா சில இடங்களுக்கு செல்வது என்பது தான் வழக்கம். அதிலும் தீம் பார்க் என்று சொல்லக் கூடிய இடங்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக செல்வார்கள். என்னதான் புதிதான தொழில்நுட்ப விளையாட்டுகள் மேல் அதிக ஆர்வம் இருந்தாலும், கொஞ்சம், உயிர் மேலும் அதிக பயம் இருக்கத்தானே செய்யும்.

அப்படி அமெரிக்காவிலுள்ள கோரோவிண்ட்ஸ் பொழுது போக்கு பூங்காவில் எப்போதும் போல கடந்த சில வாரங்களாக மக்கள் உற்சாக வெள்ளத்தில் மூழ்கியிருந்தனர். அந்தப் பூங்காவிலுள்ள ரோலர்கோஸ்டரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயணித்துக் கொண்டிருந்த போது, தொழிழ்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென பாதியிலேயே நின்றுவிட்டது. ரைடர்கள் அனைவரும் தலைகீழாக சுமார் 45 நிமிடங்கள் தொங்கிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் அனைவரும் அலற ஆரம்பித்துவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரோலர் கோஸ்டரில் சென்ற நபர் ஒருவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நான் பொழுது போக்கு பூங்காவிற்கு வருவது இதுவே முதல்முறை. துரதிர்ஸ்டவசமாக என் முதல் அனுபவத்திலேயே இப்படியொரு சம்பவம் ஏற்பட்டுள்ளது. தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்த போது தான் கண்ணீர் கீழே விழுந்ததைக் கண்கூடாக பார்த்தேன். அந்த நொடி மிகவும் பயங்கரமாக இருந்தது.

ரோலர்கோஸ்டர் உச்சியில் இருந்த போது, கீழே இருந்து தொழில்நுட்ப பழுது ஏறபட்டுள்ளாதாக எச்சரித்தனர். ஆனால் அவர்கள் திகிலாக்க, ரைடை சுவாஸ்யமாக்க அப்படி சொல்கிறார்கள் என்று நினைத்தேன். அதன் பின்பு சரி செய்வதற்கு சுமார் 40 லிருந்து 45 நிமிடங்கள் வரை ஆகும் என கூறினார்கள். அந்த ஒவ்வொரு நிமிடமும் சுமார் 1 மணி நேரம் போல் இருந்தது. உடன் பல குழந்தைகள் இருந்ததனர், கீழே இருந்த பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர். கடந்த மாதம் கூட எலக்ட்ரோ ஸ்பின் ரைட் பாதியில் நின்றது"அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக கரோவிண்ட்ஸ் பொழுதுபோக்கு பூங்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் பழுது ஏற்பட்டவுடன் பூங்கா பராமரிப்பு குழுவினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயணிகளை பத்திரமாக மீட்டனர். அரைமணி நேரத்தில் அனைவரும் பத்திரமாக விடுவிக்கப்பட்டனர். அதில் சென்ற அனைவருக்கும் இரண்டு விரைவு பாஸ்களும் வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

கரோவிண்ட்ஸ் பூங்காவில் உள்ள அனைத்து சவாரிகளும் வடக்கு மற்றும் தெற்கு கரோலிபா தொழிலாளர் துறைகளால் உரிமம் பெற்றவை. அதுமட்டுமின்றி ஆன் - சைட்-அசோசியேட்ஸ் தினமும் அனைத்து சவாரிகளையும் கண்காணித்து ஆய்வு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் அதிகமான பல பாதுகாப்பு கொடுத்தாலும் இப்படியான சம்பவங்கள் பெரும்பாலும் மக்களுக்கு அச்சத்தை அதிகரிக்க செய்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

Also Read: “உங்களைப்போல் கண்மூடித்தனமாக விமர்சிக்க மாட்டேன்; ஆனால்..” : பிரதமர் மோடியை கடுமையாக சாடிய ராகுல் காந்தி!