உலகம்
84 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய நபர்... 100 வயதில் உலக சாதனை! #WORLDUPDATES
பாஸ்போர்ட்டை திருப்பித் தரக்கோரிய நவாஸ் ஷெரீப் மகள் மனு தள்ளுபடி!
நவாஸ் ஷெரீப் மகளான மரியம் நவாஸ் தனது பாஸ்போர்ட்டை திருப்பித் தரக்கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஒரு ஊழல் வழக்கில் அவருக்கு லாகூர் உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. அப்போது நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்பேரில், தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இலங்கையில் அதிபர் ஆட்சி முறையை ஒழிக்க அரசியல் சட்ட திருத்த மசோதா
இலங்கையில் அதிபர் ஆட்சி முறையை ஒழிப்பதற்கான அரசியல் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற சபாநாயகரிடம் எதிர்க்கட்சி சமர்ப்பித்தது. அந்த மசோதாவில் ‘இலங்கையில் அதிபர் ஆட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக அரசியல் சட்ட ஜனநாயகத்தை வலுப்படுத்தும் முறை அமல்படுத்தப்பட வேண்டும். நாட்டின் தலைவராகவும், முப்படைத் தலைவராகவும் அதிபர் நீடிப்பார். மற்றபடி, பிரதமரை நியமிக்கவோ, நீக்கவோ அவருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. மந்திரிசபையின் தலைவராக பிரதமர் இருப்பார். பிரதமர் ஆலோசனையின்பேரில், மந்திரிகளை அதிபர் நியமிப்பார். அதிபருக்கு கூடுதல் அதிகாரங்களை அளிக்கும் 20-வது அரசியல் சட்ட திருத்தத்தை ரத்து செய்துவிட்டு, அதிபர் அதிகாரங்களை குறைக்கக்கூடிய 19-வது திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
கடிதங்களை பரிமாறிக் கொண்ட கொரிய அதிபர்கள்
வட கொரியா, தென் கொரியா இடையேயான பிரச்சினைகளுக்கு இடையே இருநாட்டுத் தலைவர்களும் கடிதங்களைப் பரிமாறிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் பதவிக்காலம் முடிகிறது. இதனையொட்டி அதிபர் பதவியிலிருந்து விடைபெறும் அவர் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதனை வட கொரிய அரசு ஊடகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க தருணமாகப் பார்க்கப்படுகிறது.
100 வயது முதியவர் கின்னஸ் சாதனை!
பிரேசில் நாட்டின் பிரஸ்க் நகரைச் சேர்ந்த வால்டர் ஆர்த்மேன் என்பவர், ஒரே கம்பெனியில் 84 ஆண்டுகள் பரிந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 100 வயது நிரம்பிய ஆர்த்மேன் துணி ஆலையில் பணிபுரிந்து இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். துணி உற்பத்தி நிறுவனத்தில் சாதாரண ஊழியராக வேலையில் சேர்ந்த ஆர்த்மேன் படிப்படியாக உயர்ந்து நிர்வாக பதவிக்கு வந்து, இறுதியில் விற்பனை மேலாளராக ஆகியுள்ளார். விரும்புவதை செய்து துரித உணவுகளில் இருந்து விலகியிருந்தால் நீண்ட காலம் நிறைவான தொழில் வாழ்க்கை சாத்தியம் என்கிறார் ஆர்க்மேன். மேலும், ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கத்தை கடைப்பிடிக்கும்படி இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குத்துச்சண்டை வீரரிடம் விமானத்தில் குத்து வாங்கிய பயணி!
பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், சக பயணி ஒருவரை விமானத்தில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக் டைசன் சான்பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்றில் பயணம் செய்யும்போது அவருக்கு பின் சீட்டில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் தொடர்ந்து அவரை தொந்தரவு செய்வது போல பேசிகொண்டே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அந்த பயணியின் முகத்தில் சராமாரியாக பஞ்ச் செய்துள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
Also Read
-
“கிண்டியில ஒருத்தர் நமக்காக பிரச்சாரத்தை தொடங்கிட்டாரு..” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகல!
-
ஜி.டி.நாயுடு பாலம் : மோடிக்கு நன்றியா? - போலி பிரசாரம் செய்யும் பாஜக... அம்பலப்படுத்திய TN Fact Check!
-
“தமிழ்நாடு இரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது!” : தேசிய இரத்த தான நாளில் அமைச்சர் மா.சு பேச்சு!
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!